New Zealand coach nominees for ICC Cricket team coaches

ஐசிசி கிரிக்கெட் குழுவில் பயிற்சியாளர்களுக்கான பிரதிநிதியாக நியூஸிலாந்து பயிற்சியாளர் மைக் ஹெஸ்ஸன் நியமிக்கப்பட்டார்.

ஆஸ்திரேலிய பயிற்சியாளராக இருந்த டேரன் லேமன் ஐசிசி கிரிக்கெட் குழுவில் பயிற்சியாளர்களுக்கான பிரதிநிதி பொறுப்பில் இருந்தார்.

 டெஸ்ட் கிரிக்கெட் போட்டியின்போது ஆஸ்திரேலிய அணி பந்தை சேதப்படுத்திய விவகாரத்தில் பயிற்சியாளர் பொறுப்பிலிருந்து அவர் பதவி விலகினார்.

இதனையடுத்து ஐசிசி கிரிக்கெட் கமிட்டியில் அங்கம் வகிக்கும் பொறுப்பை அவர் இழந்த நிலையில், அவர் இடத்துக்கு மைக் ஹெஸ்ஸன் நியமிக்கப்பட்டுள்ளார். 

இந்த நிலையில், ஐசிசி கிரிக்கெட் கமிட்டியில் மகளிர் கிரிக்கெட்டுக்கான பிரதிநிதியாக, ஆஸ்திரேலிய மகளிரணி முன்னாள் கேப்டன் பெலின்டா கிளார்க் நியமிக்கப்பட்டுள்ளார். முன்னதாக, இங்கிலாந்து முன்னாள் வீராங்கனை கிளேர் கான்னர் அந்தப் பொறுப்பிலிருந்தார்.

இதேபோல, உதவி உறுப்பினர்களுக்கான பிரதிநிதியாக ஸ்காட்லாந்து கேப்டன் கைல் கோயெட்ஸர் நியமிக்கப்பட்டுள்ளார். முன்னதாக அந்தப் பொறுப்பில் அயர்லாந்தின் கெவின் ஓ'பிரையன் இருந்தார்.

மேலும், முன்னாள் வீரர்களான இங்கிலாந்தின் ஆன்ட்ரூ ஸ்ட்ராஸ், இலங்கையின் மஹிலா ஜெயவர்தனே ஆகியோர், ஐசிசி கிரிக்கெட் கமிட்டியின் முன்னாள் வீரர்களுக்கான பிரதிநிதிகளாக நியமிக்கப்பட்டு உள்ளனர்.