New Zealand and South Africa will not score 321
தென் ஆப்பிரிக்காவை எதிர்த்து மூன்றாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியின் மூன்றாவது நாள் ஆட்டநேர முடிவில் நியூஸிலாந்து அணி தன்னுடைய முதல் இன்னிங்ஸில் 321 ஒட்டங்கள் எடுத்தது.
நியூஸிலாந்தின் ஹாமில்டன் நகரில் நடைபெற்று வரும் தென் ஆப்பிரிக்காவை எதிர்த்து மூன்றாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் தென் ஆப்பிரிக்கா தனது முதல் இன்னிங்ஸில் 89.2 ஓவர்களில் 314 ஓட்டங்களுக்கு அவுட்டானது.
அந்த அணியில் அதிகபட்சமாக டி காக் 90, டூபிளெஸ்ஸிஸ் 53, ஆம்லா 50 ஓட்டங்கள் குவித்தனர்.
நியூஸிலாந்து தரப்பில் மட் ஹென்றி 4 விக்கெட்டுகளையும், நீல் வாக்னர் 3 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.
பின்னர் முதல் இன்னிங்ஸை தொடர்ந்த நியூஸிலாந்து அணி 2-ஆவது நாள் ஆட்டநேர முடிவில் 25.3 ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி 67 ஓட்டங்கள் எடுத்திருந்தது.
மூன்றாவது நாளான நேற்றுத் தொடர்ந்து ஆடிய அந்த அணியில் டாம் லதாம் 50, ஜீத் ரவால் 88 ஓட்டங்கள் எடுத்து ஆட்டமிழக்க, கேப்டன் கேன் வில்லியம்சன் சதமடித்தார்.
ஆட்டநேர இறுதியில் நியூஸிலாந்து அணி தனது முதல் இன்னிங்ஸில் 104 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 321 ஓட்டங்கள் எடுத்துள்ளது.
தென் ஆப்பிரிக்கத் தரப்பில் மோர்ன் மோர்கல், காகிசோ ரபாடா ஆகியோர் தலா இரண்டு விக்கெட் வீழ்த்தினர்..
