Asianet News TamilAsianet News Tamil

பிசிசிஐ தலைவராகிறார் கங்குலி?

new chairman-of-bcci
Author
First Published Jan 3, 2017, 11:15 PM IST
பிசிசிஐ தலைவராகிறார் கங்குலி?

இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் (பிசிசிஐ) தலைவராக சவுரவ் கங்குலி தேர்ந்தெடுக்கப்பட வாய்ப்புகள் இருப்பதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

பிசிசிஐ நிர்வாகத்தில் மேற்கொள்ள வேண்டிய சீர்திருத்தங்கள் தொடர்பாக லோதா கமிட்டி அளித்த பரிந்துரைகளை ஏற்காத காரணத்தால், அந்த அமைப்பின் தலைவர் அனுராக் தாக்கூர், செயலாளர் அஜய் ஷிர்கே உள்ளிட்ட நிர்வாகிகளை பதவி நீக்கம் செய்து உச்சநீதிமன்றம் அதிரடியாக உத்தரவிட்டது.

இதையடுத்து புதிய நிர்வாகிகளை நியமிப்பதற்காக 2 பேர் கொண்ட குழுவினையும் நீதிமன்றம் அமைத்துள்ளது. பிசிசிஐ அமைப்பின் புதிய தலைவராக தற்போது துணைத் தலைவர்களாக உள்ள 7 பேரில் ஒருவர் நியமிக்கப்படலாம் என்று தெரிகிறது. 

தற்போதைய நிலையில் பணிமூப்பு அடிப்படையில் டெல்லி கிரிக்கெட் சங்கத் தலைவராக உள்ள சி.கே.கண்ணாவின் பெயர் அடிபடுகிறது. ஆனால் டெல்லி கிரிக்கெட் சங்கத்தின் பார்வையாளராக நியமிக்கப்பட்டிருந்த ஓய்வுபெற்ற நீதிபதி முகுல் முத்கல், சி.கே. கண்ணாவுக்கு எதிரான கருத்துகளை நீதிமன்றத்தில் பதிவு செய்திருந்தார். 

இந்த நிலையில், பிசிசிஐ தலைவர் பதவிக்கு இந்திய அணியின் முன்னாள் கேப்டன் கங்குலியின் பெயரையே பல்வேறு கிரிக்கெட் ஜாம்பவான்களும் பரிந்துரை செய்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

 இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள முன்னாள் கேப்டன் கவாஸ்கர், பிசிசிஐ தலைவர் பதவி என்றவுடன் கங்குலியின் பெயரே தமக்கு முதலில் நினைவுக்கு வருவதாகத் தெரிவித்துள்ளார்.

Follow Us:
Download App:
  • android
  • ios