New bowling Coach for Indian Women Cricket Team - BCCI ...

இந்திய மகளிர் கிரிக்கெட் அணிக்கு புதிய பெளலிங் பயிற்சியாளரை நியமிப்பது என்று பிசிசிஐ முடிவு எடுத்துள்ளது.

இந்திய அணியின் வீராங்கனைகளுக்கு தலைமைப் பயிற்சியாளர் துஷார் அரோத் பேட்டிங் தொழில்நுட்பம் நிபுணத்துவம் குறித்து பயிற்சி அளித்து வருகிறார். 

பிஜு ஜார்ஜ் பீல்டிங் பயிற்சியாளராக செயல்பட்டு வருகிறார். 

இருப்பினும், இந்திய மகளிர் அணிக்கு பெளலிங் பயிற்சியாளர் தேவை என்று இந்திய அணி நிர்வாகம் பிசிசிஐக்கு வேண்டுகோள் விடுத்தது. 

இதனையடுத்து இந்திய மகளிர் அணிக்கு புதிய பெளலிங் பயிற்சியாளரை நியமிப்பதற்கான விண்ணப்பங்களை பிசிசிஐ வரவேற்றுள்ளது. 

ஆசியக் கோப்பைக்கான மகளிர் அணி விரைவில் அறிவிக்கப்பட உள்ளது. மிதாலி ராஜ் தலைமையிலான இந்திய மகளிர் அணி உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் இறுதி வரை முன்னேறி உள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் இந்திய மகளிர் அணிக்கு புதிய பௌலிங் பயிற்சியாளரை நியமிப்பது என்பது பின்னடைவாக அமையுமா? அல்லது கூடுதல் பலமாக அமையுமா? என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.