neglected players in IPL auction
11வது ஐபிஎல் தொடருக்கான ஏலம் பெங்களூருவில் நடைபெற்று வருகிறது. இன்றும் நாளையும் பெங்களூருவில் ஏலம் நடைபெறுகிறது.
இன்றைய ஏலத்தில் இந்திய வீரர்களுக்கு மிகுந்த முக்கியத்துவம் கொடுக்கப்பட்டது. லோகேஷ் ராகுல், மனீஷ் பாண்டே ஆகிய வீரர்களை முறையே பஞ்சாப் மற்றும் ஹைதராபாத் அணிகள் தலா 11 கோடி ரூபாய்க்கு ஏலத்தில் எடுத்தன.
மதிய உணவு இடைவேளைக்கு முன்வரை நடந்த ஏலத்தில் அதிகபட்சமாக ரூ.12.5 கோடிக்கு இங்கிலாந்து ஆல் ரவுண்டர் பென் ஸ்டோக்ஸை ராஜஸ்தான் அணி எடுத்தது.
இன்றைய ஏலத்தில் சில முக்கிய சீனியர் வீரர்களும் அதிரடி வீரர்களும் புறக்கணிக்கப்பட்டனர்.

வெஸ்ட் இண்டீஸ் அணியின் அதிரடி பேட்ஸ்மேனான கிறிஸ் கெயிலை அடிப்படை விலை கூட கொடுத்து எடுக்க எந்த அணியும் முன்வரவில்லை. அதேபோல, நியூசிலாந்து அணியின் அதிரடி வீரர் மார்டின் கப்டிலும் புறக்கணிக்கப்பட்டார்.

இங்கிலாந்து அணியின் கேப்டன் ஜோ ரூட்டையும் எந்த அணியும் ஏலத்தில் எடுக்க முன்வரவில்லை.
தென்னாப்பிரிக்க நட்சத்திர வீரர் ஹாசிம் ஆம்லா, ஆஸ்திரேலிய ஆல் ரவுண்டர் ஜேம்ஸ் ஃபாக்னர் மற்றும் இந்திய வீரர் முரளி விஜய் ஆகியோரும் ஏலத்தில் எந்த அணியாலும் எடுக்கப்படாமல் புறக்கணிக்கப்பட்டனர்.

