National Wrestling Championship Tournament starts today in Indore ...

மத்தியப் பிரதேச மாநிலம், இந்தூரில் தேசிய மல்யுத்த சாம்பியன்ஷிப் போட்டி இன்று தொடங்குகிறது. இதில், சுஷில் குமார், சாக்ஷி மாலிக் மற்றும் கீதா போகத் ஆகியோர் கலந்து கொள்கின்றனர்.

இந்தப் போட்டியில், கடந்த 2014-ஆம் ஆண்டு நடைபெற்ற கிளாஸ்கோ காமன்வெல்த் போட்டியில் பங்கேற்று தங்கம் வென்ற சுஷில் குமார்,

ரியோ ஒலிம்பிக் போட்டியில் வெண்கலம் வென்ற சாக்ஷி மாலிக்,

ஆசியான் மல்யுத்த சாம்பியன்ஷிப் போட்டியில் வெண்கலம் வென்ற கீதா போகத் ஆகியோர் தங்களது எடைப் பிரிவுகளில் கலந்து கொள்கின்றனர்.

கிளாஸ்கோ காமன்வெல்த் போட்டிக்குப் பிறகு, முதல் முறையாக களம் காணும் சுஷில் 'ஃப்ரீ ஸ்டைல்' 74 கிலோ எடைப் பிரிவில் இந்திய இரயில்வே சார்பில் போட்டியிடுகிறார்.