National shooter Indian Army soldier Git Rai won gold Create a new achievement ...
தேசிய துப்பாக்கி சுடுதல் சாம்பியன்ஷிப் போட்டியில் ஆடவருக்கான 50 மீட்டர் பிஸ்டல் பிரிவில் இந்திய ராணுவ வீரர் ஜிது ராய் புதிய தேசிய சாதனை படைத்து தங்கம் வென்று அசத்தியுள்ளார்.
தேசிய துப்பாக்கி சுடுதல் சாம்பியன்ஷிப் போட்டியில் ஆடவருக்கான 50 மீட்டர் பிஸ்டல் பிரிவின் இறுதிச்சுற்றில் ஜிது ராய் மொத்தம் 233 புள்ளிகள் பெற்றார். இந்தப் பிரிவுக்கான இறுதிச்சுற்றில் தேசிய அளவில் இது அதிகபட்சமாகும்.
அவருக்கு அடுத்தபடியாக கடற்படை வீரர் ஓம்கார் சிங் 222.4 புள்ளிகளுடன் வெள்ளியும், மற்றொரு ராணுவ வீரரான ஜெய் சிங் 198.4 புள்ளிகளுடன் வெண்களமும் வென்றனர்.
அதேபோன்று ஆடவருக்கான 50 மீட்டர் அணிகள் பிரிவில் ஜிது ராய், ஜெய் சிங், ஓம்பிரகாஷ் ஆகியோர் அடங்கிய ராணுவ அணி 1658 புள்ளிகளுடன் முதலிடம் பிடித்து தங்கம் வென்றது.
விமானப் படை அணி 1626 புள்ளிகளுடன் 2-ஆம் இடம் பிடித்து வெள்ளியும், பஞ்சாப் அணி 1624 புள்ளிகளுடன் 3-ஆம் இடம் பிடித்து வெண்கலமும் வென்றனர்.
மற்றொரு பிரிவில் ஆடவர் ஜூனியர் 50 மீட்டர் பிஸ்டல் பிரிவில் பஞ்சாப் வீரர் அர்ஜுன் சிங் சீமா 226.5 புள்ளிகளுடன் தங்கம் வென்றார்.
அதே மாநிலத்தைச் சேர்ந்த சுரீந்தர் சிங் 221.9 புள்ளிகளுடன் 2-ஆம் இடமும், அரியாணாவின் அன்மோல் ஜெயின் 205.1 புள்ளிகளுடன் 3-ஆம் இடமும் பிடித்தனர்.
ஜூனியர் அணிகள் பிரிவில் அர்ஜுன், சுரீந்தர், மன்கரன் பிரீத் சிங் கூட்டணி தங்கம் வென்றது. இதில் அரியாணா அணி இரண்டாம் இடம் பிடித்து வெள்ளியும், டெல்லி அணி மூன்றாம் இடம் பிடித்து வெண்கலமும் வென்றன.
