National Games to be postponed for next year in Goa - Chief Ministers announcement ...

கோவாவில் நடைபெற இருந்த தேசிய விளையாட்டுப் போட்டிகள் அடிப்படைக் கட்டமைப்பு பணிகளை இன்னும் மேற்கொள்ள வேண்டிய காரணத்தால் அடுத்த ஆண்டுக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது என்று மாநில முதல்வர் மனோகர் பாரிக்கர் கூறினார்.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

இந்த நிலையில், அந்த மாநிலத்தின் தற்போதைய முதல்வர் மனோகர் பாரிக்கர் செய்தியாளர்களிடம் நேற்று கூறியது:

“தேசிய விளையாட்டுப் போட்டிகளுக்குத் தேவையான அடிப்படைக் கட்டமைப்புகள் யாவும் குறைவான விலையில் ஏற்படுத்தப்பட்ட பிறகு, கோவாவில் அடுத்த ஆண்டு தேசிய விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்படும்.

அந்தப் போட்டிகளுக்கான அடிப்படைக் கட்டமைப்புகளை ஏற்படுத்த முதலில் ரூ.570 கோடி செலவாகும் என மதிப்பிடப்பட்டது.

தற்போது லாபகரமான வகையில், அந்தச் செலவை ரூ.400 கோடியாக குறைத்துள்ளேன். இது, ரூ.350 கோடியாக குறையும் எனவும் மதிப்பிட்டுள்ளேன்.

மாநிலம் முழுவதும் விளையாட்டு அடிப்படைக் கட்டமைப்புகளை ஏற்படுத்துவதென்பது சரியான யோசனை தான். அதை ஏற்படுத்தித் தர அரசும் தயாராக உள்ளது. ஆனால், அவை முறையாக பராமரிக்கப்பட வேண்டும்.

ஊரக பகுதிகளில் அமைக்கப்படும் விளையாட்டுக் கட்டமைப்புகளின் பராமரிப்பு மற்றும் அவற்றின் வர்த்தக ரீதியிலான பயன்பாடுகள் குறித்து கேள்வி எழுகிறது. அவற்றுக்கு தீர்வு கிடைக்கும் வகையில் அந்தக் கட்டமைப்புகள் ஏற்படுத்தப்பட வேண்டும்” என்று மனோகர் பாரிக்கர் கூறினார்.

கடந்த 2016 செப்டம்பரில் நடைபெறுவதாக இருந்த இந்தப் போட்டிகள், 2017 நவம்பரில் நடத்தப்படும் என்று அப்போதைய முதல்வர் லக்ஷ்மிகாந்த் பார்சேகர் தலைமையிலான அரசு அறிவித்தது.