Natalie Carlo Masters was the tenth ...

மான்டி கார்லோ மாஸ்டர்ஸ் டென்னிஸ் போட்டியில் பத்தாவது முறையாக ஸ்பெயினின் ரஃபேல் நடால் சாம்பியன் பட்டம் வென்றார்.

மான்டி கார்லோ மாஸ்டர்ஸ் டென்னிஸ் போட்டி மொனாக்கோவின் மான்டி கார்லோ நகரில் நேற்று நடைபெற்றது.

இதன் இறுதிச் சுற்றில் நடால் - சகநாட்டவரான ஆல்பர்ட் ரேமோஸ் வினோலஸுடன் மோதினார்.

இதில், நடால் 6-1, 6-3 என்ற நேர் செட்களில் ஆல்பர்ட்டை தோற்கடித்தார்.

இந்தப் போட்டியில் 10-ஆவது முறையாக சாம்பியனாகியிருக்கிறார் நடால்.

மான்டி கார்லோ மாஸ்டர்ஸ் போட்டியில் 2005 முதல் 2012 வரை தொடர்ச்சியாக 8 முறை சாம்பியன் பட்டம் வென்ற நடால், 2013-இல் ஜோகோவிச்சிடம் தோல்வியடைந்தார்.

கடந்த ஆண்டு இங்கு 9-ஆவது பட்டத்தை வென்றார்.

கிராண்ட்ஸ்லாம் போட்டியான பிரெஞ்சு ஓபனில் 10-ஆவது பட்டத்தைக் கைப்பற்றுவதில் தீவிரமாக இருக்கும் நடால், அடுத்ததாக பார்சிலோனா ஓபனில் களமிறங்குகிறார்.