Nata and jokovich advanced in ATP tennis tournament

மாண்டேகார்லோ ஏடிபி டென்னிஸ் போட்டியில் முதல் வரிசை வீரர்களான நடால், ஜோகோயிச் அடுத்த சுற்றுக்கு முன்னேற்றம் கண்டு அசத்தியுள்ளனர்.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred

கடும் காயத்தால் பல மாதங்களாக விளையாடாமல் இருந்த ஜோகோயிச் மாண்டேகார்லோ ஏடிபி டென்னிஸ் போட்டியில் தனது 2-வது சுற்று ஆட்டத்தில் போர்நா கொரிக்குடன் மோதினார்.

இதில், 7-6 (7/2), 7-5 என்ற ஆட்டக்கணக்கில் போர்நா கொரிக்கை வீழ்த்தி அடுத்த சுற்றுக்கு தகுதி பெற்றார் ஜோகோயிச். 

அடுத்த சுற்றில் ஆஸ்ட்ரியாவின் டொமினிக் தீம், காலிறுதியில் நடாலை ஜோகோயிச் எதிர்கொள்வார்.

அதேபோன்று பத்து முறை மாண்டேகார்லோ ஏடிபி கோப்பை வென்றவரும், மற்றொரு முன்னணி வீரரான நடால், ஸ்லோவேனியாவின் தாமஸ் பெடினுடன் மோதினார்.

இதில், 6-1, 6-3 என்ற செட் கணக்கில் தாமஸ் பெடினை வீழ்த்தி காலிறுதிக்கு முந்தைய சுற்றுக்கு முன்னேறினார் நடால்.

அதேபோன்று, ஜப்பானின் நிஷிகோரி 7-5, 6-2 என்ற செட் கணக்கில் ரஷியாவின் டேனியலையும், இரண்டாம் நிலை வீரரான மரின் சிலிச் 6-3, 7-6 (7/4) என்ற செட் கணக்கில் பெர்ணாண்டோவையும் வீழ்த்தி அடுத்த சுற்றுக்கு முன்னேறினர்.