nadal won french open tennis champion 11th time

பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் போட்டியின் ஆடவர் ஒற்றையர் பிரிவில் உலகின் முதல் நிலை வீரரும், நடப்புச் சாம்பியனுமான ரஃபேல் நடால் 11-வது முறையாக சாம்பியன் பட்டம் வென்று அசத்தி உள்ளார். 

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred

அவர் ஆஸ்திரியாவின் டொமினிக் தீமை 6-4, 6-3, 6-2 என்ற நேர் செட்களில் வீழ்த்தினார்.

கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் ஒன்றான பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் போட்டி பாரிஸ் ரோலண்ட் காரோஸ் மைதானத்தில் நடந்து வருகின்றன.

ஏற்கெனவே சனிக்கிழமை நடந்த மகளிர் ஒற்றையர் பிரிவு இறுதிச் சுற்றில் ருமேனியாவின் சிமோனா ஹலேப் நேர் செட்களில் அமெரிக்காவின் ல்லோன் ஸ்டீபன்ஸை வீழ்த்தி முதன்முறையாக சாம்பியன் பட்டம் வென்றார்.

இந்த நிலையில் ஆடவர் இறுதிச்சுற்று ஆட்டம் நேற்று இரவு நடைபெற்றது. இதில் நடாலும், ஆஸ்திரியாவின் டொமினிக் தீமும் மோதினர்.

முதல் செட்டில் தீம் சிறிது போராடினாலும், நடால் தனது ஆதிக்கத்தை நிலை நிறுத்தி 6-4 என வென்றார். அதைத் தொடர்ந்து இரண்டாவது செட்டிலும் நடாலின் சிறப்பான ஆட்டத்தால் 6-3 என எளிதாக வென்றார். 

மூன்றாவது மற்றும் இறுதி செட்டிலும் நடாலின் அபார ஆட்டத்தை தீமால் சமாளிக்க முடியவில்லை. துவக்கத்திலேயே 3-1 என நடால் முன்னிலை பெற்றார். இறுதியில் அந்த செட்டையும் 6-2 என்ற கணக்கில் கைப்பற்றினார்.

பிரெஞ்ச் ஓபன் போட்டியில் ஏற்கெனவே 10 முறை சாம்பியன் பட்டம் வென்றுள்ள நடால், இந்த வெற்றியின் மூலம் 11-வது முறையாக பட்டம் வென்று சாதனை புரிந்துள்ளார்.