ஆசிய கோப்பை கால்பந்து போட்டியில், மியான்மரை அதன் சொந்த மண்னில் 64 ஆண்டுகளுக்குப் பிறகு சாய்த்து வெற்றி வாகைச் சூடியது இந்திய அணி.

ஆசிய கோப்பை கால்பந்து போட்டி ஐக்கிய அரபு அமீரகத்தில் 2019–ம் ஆண்டு ஜனவரி மற்றும் பிப்ரவரி மாதத்தில் நடக்கிறது.

ஆசிய கோப்பை கால்பந்து போட்டி ஐக்கிய அரபு அமீரகத்தில் 2019–ஆம் ஆண்டு ஜனவரி மற்றும் பிப்ரவரி மாதத்தில் நடக்க இருக்கிறது.

இந்த போட்டிக்கான மூன்றவது தகுதிச் சுற்று ஆட்டம் உள்ளூர் – வெளியூர் அடிப்படையில் நடைபெற்று வருகிறது. இதில் பங்கேற்றுள்ள 24 அணிகள் ஆறு பிரிவுகளாக பிரிக்கப்பட்டு மோதி வருகின்றன.

லீக் முடிவில் ஒவ்வொரு பிரிவிலும் முதல் இரண்டு இடங்களை பிடிக்கும் அணிகள் ஆசிய கோப்பைப் போட்டிக்குத் தகுதிப் பெறும்.

‘ஏ’ பிரிவில் இடம் பிடித்துள்ள இந்திய அணி மியான்மரில் உள்ள யான்கோனில் நேற்று நடந்த லீக் ஆட்டத்தில் மியான்மரை எதிர்கொண்டது.

விறுவிறுப்பான இந்த ஆட்டத்தில் இந்திய அணி 1–0 என்ற கோல் கணக்கில் மியான்மரை வீழ்த்தியது.

90–வது நிமிடத்தில் உதன்டா சிங் கடத்தி கொடுத்த பந்தை சுனில் சேத்ரி கோலாக்கி இந்திய அணிக்கு வெற்றியை தேடித் தந்தார்.

இந்திய அணி, மியான்மரை அதன் சொந்த மண்ணில் 64 ஆண்டுகளுக்கு பிறகு சாய்த்து வெற்றி வாகை சூடி இருக்கிறது.

கடைசியாக 1953–ஆம் ஆண்டில் இந்திய அணி, மியான்மரை வென்றது என்பது குறிப்பிடத்தக்கது.