Murtak Ali Tamil Nadu defeated Goa by 25 runs
செய்யது முஷ்டாக் அலி டி20 கிரிக்கெட் போட்டியில் கோவாவை 25 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது தமிழகம்.
செய்யது முஷ்டாக் அலி டி20 கிரிக்கெட் போட்டி தெற்கு மண்டல பிரிவில் நடைபெற்றது.
இந்த ஆட்டத்தில் முதலில் பேட் செய்த தமிழகம் 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 155 ஓட்டங்கள் எடுத்தது. பின்னர் ஆடிய கோவா 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 130 ஓட்டங்களுக்கு வீழ்ந்தது.
டாஸ் வென்று முதலில் பேட் செய்த தமிழக அணியில் தினேஷ் கார்த்திக் மட்டும் அதிகபட்சமாக 6 பவுண்டரிகள், ஒரு சிக்ஸர் உள்பட 56 ஓட்டங்கள் எடுத்தார்.
தொடக்க வீரர் அபினவ் முகுந்த் 12 ஓட்டங்கள் , உடன் வந்த வாஷிங்டன் சுந்தர் 14 ஓட்டங்களில் வெளியேறினர். கேப்டன் விஜய் சங்கர் 2 ஓட்டங்களில் ஆட்டமிழக்க, பாபா அபராஜித் 26 ஓட்டங்களில் பெவிலியன் திரும்பினார்.
இறுதியாக சஞ்சய் யாதவ் 28 ஓட்டங்கள் , ஜெகதீசன் 10 ஓட்டங்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனர்.
கோவா தரப்பில் சுனில் தேசாய் 3 விக்கெட்கள், ஸ்ரீனிவாஸ் ஃபட்டே, அசித் ஷிக்வான் தலா ஒரு விக்கெட் எடுத்தனர்.
பின்னர் 156 ஓட்டங்கள் இலக்குடன் ஆடிய கோவா அணியில் கேப்டன் சகுன் காமத் அதிகபட்சமாக 41 ஓட்டங்கள் எடுத்தார்.
சுனில் தேசாய் 25 ஓட்டங்கள் , தர்சன் மிஷல் 23 ஓட்டங்கள் எடுக்க, எஞ்சிய வீரர்கள் சொற்ப ஓட்டங்களில் வீழ்ந்தனர்.
தமிழக தரப்பில் வாஷிங்டன் சுந்தர், எம்.அஸ்வின் தலா 2 விக்கெட்டுகளும், விக்னேஷ், டேவிட்சன், சாய் கிஷோர் தலா ஒரு விக்கெட்டும் எடுத்தனர்.
