Murali Vijay took a half century lifted Indias score
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் அரை சதம் எடுத்து இந்தியாவின் ஸ்கோரை உயர்த்தியுள்ளார் முரளி விஜய்.
ஜார்க்கண்ட் தலைநகர் ராஞ்சியில் நடைபெற்று வரும் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 3-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் ஆஸ்திரேலியா முதலில் பேட் செய்தது.
ஆஸ்திரேலியா முதல் இன்னிங்ஸில் 137.3 ஓவர்களில் 451 ஓட்டங்கள் குவித்து ஆல் அவுட்டானது. அந்த அணியின் கேப்டன் ஸ்டீவன் ஸ்மித் 361 பந்துகளில் 17 பவுண்டரிகளுடன் ஆட்டமிழக்காமல் 178 ஓட்டங்கள் குவித்தார்.
மேக்ஸ்வெல் 185 பந்துகளில் 2 சிக்ஸர், 9 பவுண்டரிகளுடன் 104 ஓட்டங்கள் குவித்தார்.
இந்த ஜோடி 5-ஆவது விக்கெட்டுக்கு 191 ஓட்டங்கள் சேர்த்தது. 2-ஆவது நாள் ஆட்டநேர முடிவில் இந்திய அணி 40 ஓவர்களில் ஒரு விக்கெட் இழப்புக்கு 120 ஓட்டங்கள் எடுத்தது. முரளி விஜய் 42, புஜாரா 10 ஓட்டங்களுடன் களத்தில் உள்ளார்.
இந்த நிலையில் இன்று ஆட்டம் தொடர்ந்தபோது கவனமாக ஆடிய முரளி விஜய் அரை சதம் எடுத்தார். அவர் 129 பந்துகளில் 1 சிக்ஸர் 6 பவுண்டரிகளுடன் அரை சதத்தைப் பூர்த்தி செய்தார்.
இந்திய அணி 52 ஓவர்களின் முடிவில் 1 விக்கெட் இழப்புக்கு 138 ஓட்டங்கள் எடுத்துள்ளது. முரளி விஜய் 50, புஜாரா 19 ஓட்டங்களுடன் களத்தில் இருக்கின்றனர்.
