Mumbai was the only one to win a victory from Pune.
ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் இறுதி ஆட்டத்தில் வெறும் ஒரு ரன் வித்தியாசத்தில் புணே அணியை தோற்கடித்தது மும்பை அணி. இதன்மூலம் மூன்றாவது முறையாக சாம்பியன் பட்டம் வென்றுள்ளது மும்பை.
ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் இறுதி ஆட்டம் ஐதராபாதில் நேற்று நடைபெற்றது.
இந்த ஆட்டத்தில் டாஸ் வென்று முதலில் பேட் செய்த மும்பை அணியில் பார்த்திவ் படேல் 4 ஓட்டங்கள், லென்டில் சிம்மன்ஸ் 3 ஓட்டங்களில் வெளியேறி அதிர்ச்சியளித்தனர்.
பின்னர், அம்பட்டி ராயுடுவுடன் இணைந்தார் கேப்டன் ரோஹித் சர்மா. இந்த ஜோடி நிதானம் காட்ட, முதல் 5 ஓவர்களில் 16 ஓட்டங்கள் எடுத்தது மும்பை. பெர்குசன் வீசிய 6-ஆவது ஓவரில் ரோஹித் சர்மா 4 பவுண்டரிகளை பறக்கவிட்ட, அந்த ஓவரில் 16 ஓட்டங்கள் கிடைத்தன.
மும்பை அணி 7.2 ஓவர்களில் 41 ஓட்டங்கள் எடுத்திருந்தபோது அம்பட்டி ராயுடு 12 ஓட்டங்கள் எடுத்து ரன் அவுட்டானார்.
இதையடுத்து ரோஹிச் சர்மாவுடன் இணைந்தார் கிருனால் பாண்டியா. இந்த ஜோடி விக்கெட்டை காப்பாற்ற போராட, மும்பை அணி 10 ஓவர்களில் 56 ஓட்டங்கள் மட்டுமே எடுத்தது. ஆடம் ஸம்பா வீசிய 11-ஆவது ஓவரின் முதல் பந்தில் சிக்ஸரை விளாச முயற்சித்தார் ரோஹித் சர்மா. ஆனால், எல்லைக் கோட்டில் நின்ற ஷர்துல் தாக்குரின் கையில் தஞ்சம்புகுந்தது பந்து. இதனால் ரோஹித் சர்மா 24 ஓட்டங்களில் வெளியேறினார்.
இதன்பிறகு களம்புகுந்த கிரண் போலார்ட் 7 ஓட்டங்கள், ஹார்திக் பாண்டியா 10 ஓட்டங்கள், கரண் சர்மா 1 ஓட்டம் என அடுத்தடுத்து வெளியேற, 14.1 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 79 ஓட்டங்கள் எடுத்திருந்தது மும்பை.
இதையடுத்து கிருனால் பாண்டியாவுடன் இணைந்தார் மிட்செல் ஜான்சன். இந்த ஜோடி நிதானம் காட்ட, 17 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 92 ஓட்டங்கள் எடுத்திருந்தது மும்பை.
கிறிஸ்டியான் வீசிய 18-ஆவது ஓவரில் ஜான்சன் ஒரு சிக்ஸரை விளாச, பாண்டியா தன் பங்குக்கு ஒரு பவுண்டரியை விரட்டினார். உனட்கட் வீசிய அடுத்த ஓவரில் ஒரு சிக்ஸரை விளாசிய பாண்டியா, கிறிஸ்டியான் வீசிய கடைசி ஓவரில் ஒரு பவுண்டரியையும், ஒரு சிக்ஸரையும் விரட்டினார்.
கடைசிப் பந்தில் சிக்ஸர் அடிக்க முயன்ற பாண்டியா, ரஹானேவிடம் கேட்ச் ஆனார். இறுதியில் மும்பை அணி 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 129 ஓட்டங்கள் சேர்த்து ஐபிஎல் இறுதி ஆட்டத்தில் முதலில் பேட் செய்த ஓர் அணி எடுத்த குறைந்தபட்ச ஸ்கோர் எட்டியது.
பாண்டியா 38 பந்துகளில் 2 சிக்ஸர், 3 பவுண்டரிகளுடன் 47 ஓட்டங்கள் சேர்த்து ஆட்டமிழந்தார். ஜான்சன் 13 ஓட்டங்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார்.
புணே தரப்பில் ஜெயதேவ் உனட்கட் 2 விக்கெட்டுகளையும், ஆடம் ஸம்பா, கிறிஸ்டியான் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.
பின்னர் ஆடிய புணே அணியில் ராகுல் திரிபாதி 3 ஓட்டங்கள் எடுத்த நிலையில் பூம்ரா பந்துவீச்சில் ஆட்டமிழக்க, அஜிங்க்ய ரஹானேவுடன் இணைந்தார் கேப்டன் ஸ்டீவன் ஸ்மித். அசத்தலாக ஆடிய இந்த ஜோடி, புணே அணி 11.5 ஓவர்களில் 72 ஓட்டங்கள் எட்டியபோது பிரிந்தது.
ரஹானே 38 பந்துகளில் 5 பவுண்டரிகளுடன் 44 ஓட்டங்கள் சேர்த்து ஆட்டமிழக்க, பின்னர் வந்த தோனி 10 ஓட்டங்களில் ஆட்டமிழந்தார்.
இதையடுத்து ஸ்மித்துடன் இணைந்தார் மனோஜ் திவாரி. கடைசி 3 ஓவர்களில் புணேவின் வெற்றிக்கு 30 ஓட்டங்கள் தேவைப்பட்டன. 18-ஆவது ஓவரை வீசிய மலிங்கா 7 ஓட்டங்கள் மட்டுமே கொடுக்க, கடைசி 2 ஓவர்களில் 23 ஓட்டங்கள் எடுக்க வேண்டிய நிலை ஏற்பட்டது.
ஜஸ்பிரித் பூம்ரா வீசிய 19-ஆவது ஓவரில் ஸ்மித் சிக்ஸரை விளாச, அந்த ஓவரில் 12 ஓட்டங்கள் கிடைத்தன. புணேவின் வெற்றிக்கு கடைசி ஓவரில் 11 ஓட்டங்கள் எடுக்க வேண்டியிருந்தது. ஜான்சன் வீசிய அந்த ஓவரின் முதல் பந்தில் பவுண்டரி அடித்த மனோஜ் திவாரி 7 ஓட்டங்கள் எடுத்து நிலையில் ஆட்டமிழந்தார்..
3-ஆவது பந்தில் சிக்ஸரை விளாச முயன்ற ஸ்மித், அம்பட்டி ராயுடுவால் அற்புதமாக கேட்ச் செய்யப்பட்டார். 50 பந்துகளைச் சந்தித்த அவர் 2 சிக்ஸர், 2 பவுண்டரிகளுடன் 51 7 ஓட்டங்கள் எடுத்தார் எடுத்தார்.
4-ஆவது பந்தில் வாஷிங்டன் சுந்தர் 1 ரன்னும், 5-ஆவது பந்தில் கிறிஸ்டியான் 2 ஓட்டங்களும் எடுக்க, கடைசி பந்தில் பவுண்டரி அடித்தால் வெற்றி என்ற நிலை ஏற்பட்டது. அதில் பந்தை தூக்கியடித்த கிறிஸ்டியான் 3-ஆவது ரன் எடுக்க முயன்றபோது ரன் அவுட்டானார். இதனால் புணே அணி 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 128 ஓட்டங்கள் மட்டுமே எடுத்து தோல்வி கண்டது.
மும்பை தரப்பில் மிட்செல் ஜான்சன் 3 விக்கெட்டுகளையும், ஜஸ்பிரித் பூம்ரா 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.
கிருனால் பாண்டியா ஆட்டநாயகனாகத் தேர்வு செய்யப்பட்டார்.
சாம்பியன் பட்டம் வென்ற மும்பை அணிக்கு கோப்பையுடன் ரூ.15 கோடியும், 2-ஆவது இடம்பிடித்த புணேவுக்கு ரூ.10 கோடியும் ரொக்கப் பரிசாக வழங்கப்பட்டன.
முன்னதாக 2013, 2015 ஆகிய ஆண்டுகளில் மும்பை சாம்பியன் பட்டம் வென்றுள்ளது. இதன்மூலம் ஐபிஎல் தொடரில் அதிகமுறை சாம்பியன் பட்டம் வென்ற அணி என்ற பெருமையும் மும்பை வசமானது.
