ஐபிஎல் 11 சீசன்கள் வெற்றிகரமாக நடந்துமுடிந்துள்ளன. 12வது சீசன் அடுத்த ஆண்டு நடக்க உள்ளது. அடுத்த ஆண்டு மே மாத இறுதியில் உலக கோப்பை தொடங்க இருப்பதால், ஐபிஎல் சீசன் வழக்கத்தைவிட முன்னதாகவே தொடங்கப்பட உள்ளது. அதனால் வழக்கமாக ஜனவரி அல்லது பிப்ரவரி மாதம் நடக்கும் வீரர்கள் ஏலம் இம்முறை டிசம்பர் மாதம் கோவாவில் நடக்க உள்ளது. 

அதனால் அதற்கு முன்னதாக அனைத்து அணிகளும் தாங்கள் தக்கவைக்க விரும்பாத வீரர்களின் பட்டியலை சமர்ப்பிக்குமாறு கேட்டிருந்தது. இதையடுத்து வீரர்கள் பரிமாற்றம் குறித்த பேச்சுவார்த்தைகள் நடந்ததோடு தக்கவைக்க விரும்பாத வீரர்களின் பெயர்களை ஐபிஎல் அணிகள் வெளியிட்டுவருகின்றன. 

சென்னை அணி மார்க் உட், கனிஷ்க் சேத், ஹிதிஸ் சர்மா ஆகிய மூவரையும் விடுவித்தது. இந்நிலையில், 3 முறை ஐபிஎல் கோப்பையை வென்ற மும்பை இந்தியன்ஸ் அணி மொத்தமாக 10 பேரை விடுவித்துள்ளது. பும்ரா, மார்கண்டே, பொல்லார்டு, பென் கட்டிங் உள்ளிட்ட 18 வீரர்களை தக்கவைத்துள்ளது. 

பாட் கம்மின்ஸ், டுமினி, சவுரப் திவாரி, முஸ்தாஃபிசுர் ரஹ்மான் உள்ளிட்ட 10 வீரர்களை விடுவித்துள்ளது. 

மும்பை இந்தியன்ஸ் அணி விடுவித்த வீரர்கள்:

சவுரப் திவாரி, பிரதீப் சங்வான், மோசின் கான், எம்டி நிதீஷ், ஷரத் லும்பா, தஜிந்தர் சிங், ஜேபி டுமினி, பாட் கம்மின்ஸ், முஷ்தாஃபிசுர் ரஹ்மான், அகிலா தனஞ்செயா.

மும்பை இந்தியன்ஸ் அணி தக்கவைத்த வீரர்கள்:

ரோஹித் சர்மா(கேப்டன்), ஹர்திக் பாண்டியா, குருணல் பாண்டியா, பும்ரா, இஷான் கிஷான்(விக்கெட் கீப்பர்), சூர்யகுமார் யாதவ், மயன்க் மார்கண்டே, ராகுல் சாஹர், அனுகுல் ராய், சித்தேஷ் லட், ஆதித்ய தரே, பொல்லார்டு, பென் கட்டிங், மிட்செல் மெக்லனேகன், ஆடம் மில்னே, எவின் லிவிஸ், ஜேசன் பெரெண்டோர்ஃப்.