Mumbai - Delhi crashes today Who is going to play
ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 25-ஆவது லீக் ஆட்டம் மும்பை - டெல்லி இடையே இன்று மும்பையில் நடைபெறுகின்றன.
இதுவரை, மும்பை அணி ஆறு ஆட்டங்களில் விளையாடி ஐந்து வெற்றிகளைப் பெற்றுள்ளது.
டெல்லி அணி ஐந்து ஆட்டங்களில் விளையாடி இரண்டு வெற்றிகளை மட்டுமே பெற்றுள்ளன.
மும்பை அணி பலம் வாய்ந்த பேட்ஸ்மேன்களைக் கொண்டுள்ளது. ஆனால், இந்த அணியின் பந்துவீச்சு கவலையளிப்பதாக உள்ளது.
டெல்லி அணியின் பேட்டிங்கைப் பொறுத்தவரையில் சஞ்சு சாம்சன், ரிஷப் பந்த், ஷ்ரேயஸ் ஐயர் ஆகியோர் சிறப்பாக ஆடி வந்தாலும், சாம் பில்லிங்ஸ், கருண் நாயர் ஆகியோர் பெரிய அளவில் ரன் குவிக்கவில்லை.
இதனால் அந்த அணியால் பெரிய அளவிலான ஸ்கோரை குவிக்கவோ, பெரிய இலக்கை எட்டவோ முடியாத சூழ்நிலையில் உள்ளன.
வேகப்பந்து வீச்சில் கிறிஸ் மோரீஸ் அசத்தலாக பந்துவீசி வருகிறார். ஜாகீர்கான் அவருக்கு பக்கபலமாக செயல்பட்டு வருகிறார். மற்ற பெளலர்கள் பெரிய அளவில் ஜொலிக்கவில்லை.
இன்று இரவு 8 சோனி மேக்ஸ், சோனி சிக்ஸ் தொலைக்காட்சிகளில் நேரடி ஒளிபரப்பாகும்.
