Mugurauza is the first woman in the International Womens Singles Rankings for the first time.
சர்வதேச மகளிர் ஒற்றையர் (டபிள்யூடிஏ) தரவரிசையைப் பொறுத்தவரையில் ஸ்பெயினின் கார்பைன் முகுருஸா முதல்முறையாக முதலிடத்தைப் பிடித்துள்ளார்.
முதலிடத்தில் இருந்த செக்.குடியரசின் கரோலினா பிளிஸ்கோவா 4-வது இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளார்.
ருமேனியாவின் சைமோனா ஹேலப் தொடர்ந்து 2-வது இடத்தில் உள்ளார்.
உக்ரைனின் எலினா ஸ்விட்டோலினா ஓர் இடம் முன்னேறி 3-வது இடத்தையும், அமெரிக்காவின் வீனஸ் வில்லியம்ஸ் 4 இடங்கள் முன்னேறி 5-வது இடத்தையும் பிடித்துள்ளனர்.
அதேநேரத்தில் 5-வது இடத்தில் இருந்த டென்மார்க்கின் கரோலின் வோஸ்னியாக்கி 6-வது இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளார்.
அமெரிக்க ஓபனில் சாம்பியன் பட்டம் வென்ற ஸ்லோனே ஸ்டீபன்ஸ் 66 இடங்கள் முன்னேறி 17-வது இடத்தைப் பிடித்துள்ளார்.
அதேபோன்று, சர்வதேச ஆடவர் ஒற்றையர் டென்னிஸ் (ஏடிபி) தரவரிசையில் அமெரிக்க ஓபன் சாம்பியனான ஸ்பெயினின் ரஃபேல் நடால் தொடர்ந்து முதலிடத்தில் இருக்கிறார்.
ஸ்விட்சர்லாந்தின் ரோஜர் ஃபெடரர் 3-வது இடத்தில் இருந்து 2-வது இடத்துக்கு முன்னேறியுள்ளார்.
காயம் காரணமாக அமெரிக்க ஓபனில் பங்கேற்காத பிரிட்டனின் ஆன்டி முர்ரே 2-வது இடத்தில் இருந்து 3-வது இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளார்.
4-வது இடத்தில் இருந்த செர்பியாவின் நோவக் ஜோகோவிச், 6-வது இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளார்.
ஜெர்மனியின் அலெக்சாண்டர் ஸ்வெரேவ் 4-வது இடத்திலும், குரோஷியாவின் மரின் சிலிச் 5-வது இடத்திலும் உள்ளனர்.
ஸ்விட்சர்லாந்தின் ஸ்டானிஸ்லஸ் வாவ்ரிங்கா 4 இடங்களை இழந்து 8-வது இடத்துக்கு பின தங்கினார்.
ஸ்பெயினின் பாப்லோ கரீனோ பஸ்டா 9 இடங்கள் முன்னேறி 10-வது இடத்தைப் பிடித்துள்ளார்.
அமெரிக்க ஓபனில் இறுதிச் சுற்று வரை முன்னேறிய தென் ஆப்பிரிக்காவின் கெவின் ஆண்டர்சன் 17 இடங்கள் முன்னேறி 15-வது இடத்தைப் பிடித்துள்ளார்.
