காவிரி மேலாண்மை வாரியத்திற்காக தமிழகத்தில் அரசியல் கட்சியினர், விவசாயிகள் என பல தரப்பினரும் போராடிவருகின்றனர். காவிரிக்காக தமிழர்கள் போராட்ட களத்தில் ஒன்றிணைந்துள்ள இந்த நேரத்தில், ஐபிஎல் போட்டியை சென்னையில் நடத்தக்கூடாது என்ற குரல்கள் வலுத்துள்ளன.

சீமான், வேல்முருகன் உள்ளிட்டோரும் பாரதிராஜா, சத்யராஜ், அமீர், தங்கர்பச்சன், வெற்றிமாறன், ராம் உள்ளிட்ட திரைத்துறையினரும் சென்னையில ஐபிஎல் போட்டியை நடத்த எதிர்ப்பு தெரிவித்துவருகின்றனர்.

இதனால் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. வீரர்களுக்கும் பலத்த பாதுகாப்பு கொடுக்கப்பட்டுள்ளது.

அசம்பாவிதங்களை தடுக்கும் நோக்கில் கிரிக்கெட் போட்டியை காணவரும் ரசிகர்கள், பை, செல்போன், லேப்டாப், பேனர், கறுப்பு துணி, தண்ணீர் பாட்டில்கள், உணவுகள், குளிர்பானங்கள், இசைக்கருவிகள் என எதுவும் எடுத்து செல்ல கூடாது என கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.

Match update: mobile phones will be allowed inside the stadium today. #Whistlepodu #CSKHomeComing #CSKvsKKR #Yellove
— Chennai Super Kings (@ChennaiIPL) April 10, 2018

இந்நிலையில், மைதானத்திற்குள் செல்போன் எடுத்து செல்ல தடையில்லை. செல்போன் எடுத்து செல்லலாம் என சென்னை அணியின் டுவிட்டர் பக்கத்தில் பதிவிடப்பட்டுள்ளது.

இதனால் ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.