Asianet News TamilAsianet News Tamil

இந்திய அணியை வீழ்த்த ஆஸ்திரேலியாவின் வியூகம்!! 2 வருஷத்துக்கு பிறகு அணிக்கு திரும்பும் வேகப்பந்து வீச்சாளர்

சிட்னியில் நடக்க உள்ள கடைசி டி20 போட்டி மிக முக்கியமானது. இந்த போட்டியில் ஆஸ்திரேலிய அணி வென்றால் தொடரை கைப்பற்றும். அதேநேரத்தில் இனிமேல் தொடரை வெல்ல வாய்ப்பில்லாத இந்திய அணி, கடைசி போட்டியில் வென்றால் தொடரை 1-1 என சமன் செய்யும். 

mitchell starc back to t20 team after 2 years
Author
Australia, First Published Nov 24, 2018, 3:28 PM IST

இந்தியா - ஆஸ்திரேலியா இடையேயான 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் 2 போட்டிகள் முடிந்துள்ள நிலையில், 1-0 என ஆஸ்திரேலிய அணி முன்னிலை வகிக்கிறது. எனவே நாளை நடக்க உள்ள கடைசி போட்டியில் வெற்றி பெற்று தொடரை வெல்லும் முனைப்பில் ஆஸ்திரேலிய அணியும், நாளைய போட்டியில் வென்று தொடரை சமன்செய்யும் முனைப்பில் இந்திய அணியும் உள்ளன. 

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா ஆகிய அணிகளுக்கு இடையே பிரிஸ்பேனில் நடந்த முதல் டி20 போட்டியில் இந்திய அணி 4 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. அந்த போட்டியின் குறுக்கே மழை வந்ததால் போட்டி 17 ஓவர்களாக குறைக்கப்பட்டு இந்திய அணிக்கு 174 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டது. இந்திய அணி 17 ஓவர் முடிவில் 169 ரன்கள் எடுத்ததால் 4 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலிய அணி வெற்றி பெற்றது. 

எனவே மெல்போர்னில் நேற்று நடந்த இரண்டாவது போட்டியில் வெல்லும் முனைப்பில் அபாரமாக பந்துவீசி ஆஸ்திரேலிய அணியை இந்திய அணி சுருட்டியது. 19 ஓவருக்கு அந்த அணி 132 ரன்கள் எடுத்திருந்த நிலையில் மழை வந்தது. அத்துடன் போட்டி நிறுத்தப்பட்டு, டக்வொர்த் முறைப்படி இலக்கு நிர்ணயிக்கப்பட்டு இரண்டு முறை போட்டி மீண்டும் தொடங்க முயற்சி செய்யப்பட்டது. ஆனால் மழை விட்டு விட்டு மீண்டும் மீண்டும் வந்ததால் போட்டி கைவிடப்பட்டது. 

mitchell starc back to t20 team after 2 years

அதனால் நாளை சிட்னியில் நடக்க உள்ள கடைசி டி20 போட்டி மிக முக்கியமானது. இந்த போட்டியில் ஆஸ்திரேலிய அணி வென்றால் தொடரை கைப்பற்றும். அதேநேரத்தில் இனிமேல் தொடரை வெல்ல வாய்ப்பில்லாத இந்திய அணி, கடைசி போட்டியில் வென்றால் தொடரை 1-1 என சமன் செய்யும். எனவே இரு அணிகளும் வெற்றி முனைப்பில் உள்ளன. 

இந்நிலையில், இந்திய அணியை வீழ்த்தும் முனைப்பில் இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் டி20 அணியில் சேர்க்கப்பட்டுள்ளார் ஆஸ்திரேலிய அணியின் நட்சத்திர வேகப்பந்து வீச்சாளர் மிட்செல் ஸ்டார்க். இவர் 2016ம் ஆண்டுக்கு பிறகு சர்வதேச டி20 போட்டிகளில் ஆடவில்லை. பில்லி ஸ்டேன்லேக் முதல் போட்டியில் காயமடைந்த நிலையில், இரண்டாவது போட்டியில் அவருக்கு பதிலாக நாதன் குல்டர்நைல் சேர்க்கப்பட்டிருந்தார். இந்நிலையில், கடைசி போட்டியில் மிட்செல் ஸ்டார்க் சேர்க்கப்பட்டுள்ளார். 
 

Follow Us:
Download App:
  • android
  • ios