மியாமி ஓபன் டென்னிஸ் போட்டியில் மகளிர் ஒற்றையர் பிரிவு 4-வது சுற்று ஆட்டத்தில் வெற்றி பெற்றார் அமெரிக்காவின் வீனஸ் வில்லியம்ஸ்.

மியாமி ஓபன் டென்னிஸ் போட்டி அமெரிக்காவில் நடைபெற்று வருகிறது. இதில், நேற்று நடைபெற்ற 4-வது சுற்று ஆட்டத்தில் பிரிட்டனின் ஜோகன்னா கொண்டாவை வீனஸ் வில்லியம்ஸ் எதிர்கொண்டார்.

முதல் செட்டை 5-7 என்ற கணக்கில் போட்டித் தரவரிசையில் 11-வது இடத்தில் இருந்த ஜோகன்னாவிடம் பறிகொடுத்தார் வீனஸ். 

டை-பிரேக்கர் வரை சென்றபோதிலும் இறுதி வரை போராடியும் வீனஸால் செட்டை கைப்பற்ற முடியவில்லை. இருப்பினும், சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய வீனஸ், 6-1 என்ற கணக்கில் மிக மிக எளிதாக 2-வது செட்டை கைப்பற்றினார். 

இந்த ஆட்டத்தின் வெற்றியைத் தீர்மானிக்கும் 3-வது செட் ஆட்டத்தில் செட்டை 6-2 என்ற கணக்கில் எளிதில் கைப்பற்றினார் வீனஸ்.

நடப்பு சாம்பியனுமான 26 வயது ஜோகன்னா ஏமாற்றத்துடன் வீனஸிடம் கைகுலுக்கிவிட்டு போட்டியிலிருந்து வெளியேறினார்.

காலிறுதியில், சர்வதேச டென்னிஸ் ஒற்றையர் தரவரிசையில் 93-வது இடத்தில் உள்ள சக நாட்டவரான 24 வயது டி.ஆர்.காலின்ஸை வீனஸ் இன்று மோதுகிறார்.