Miami Open India Yuki Pompry qualifying round progress

மியாமி ஓபன் டென்னிஸ் போட்டியில் ஆடவர் ஒற்றையர் பிரிவில் இந்தியாவின் யூகி பாம்ப்ரி தகுதிச்சுற்றின் கடைசி ஆட்டத்துக்கு முன்னேறியுள்ளார்.

மியாமி ஓபன் டென்னிஸ் போட்டியில் அமெரிக்காவின் ஃபுளோரிடா மாகாணத்தில் நடைபெறுகிறது. இந்தப் போட்டியில், உலகின் 107-ஆம் நிலை வீரரான பாம்ப்ரி தனது முதல் தகுதிச்சுற்றில், உலகின் 184-ஆம் நிலை வீரரான ஆர்ஜென்டீனாவின் ரென்úஸா ஆலிவோவை எதிர்கொண்டார். 

இந்த ஆட்டத்தின் முடிவில் 6-4, 6-1 என்ற நேர் செட்களில் பாம்ப்ரி வென்றதையடுத்து அவர் தனது 2-வது தகுதிச்சுற்றில், உலகின் 133-ஆம் நிலையில் இருக்கும் ஸ்வீடனின் எலியாஸ் ஒய்மெரை சந்திக்கிறார். 

அவரை வெல்லும் பட்சத்தில் மியாமின் ஓபனின் பிரதான சுற்றுக்கு பாம்ப்ரி தகுதிபெறுவார் என்பது கொசுறு தகவல்.

பாம்ப்ரி, சமீபத்தில் நிறைவடைந்த இன்டியன் வெல்ஸ் டென்னிஸ் போட்டியில் பிரதான சுற்றின் 2-வது ஆட்டம் வரை முன்னேறியிருந்தார்.

இதனிடையே, மியாமி ஓபனில் பங்கேற்ற மற்றொரு இந்தியரான ராம்குமார் ராமநாதன் தனது முதல் தகுதிச் சுற்றிலேயே அமெரிக்காவின் மைக்கெல் மோவிடம் 6-7(4/7), 4-6 என்ற செட்களில் தோல்வி கண்டு போட்டியிலிருந்து வெளியேறினார்.