- Home
- Sports
- Sports Cricket
- Ind vs Pak: இந்தியா, பாகிஸ்தான் மேட்ச்க்கு குறுக்கே நிற்கும் மழை.. கொழும்பு வானிலை அப்டேட் இதோ!
Ind vs Pak: இந்தியா, பாகிஸ்தான் மேட்ச்க்கு குறுக்கே நிற்கும் மழை.. கொழும்பு வானிலை அப்டேட் இதோ!
ti20 உலககோப்பையில் இந்தியா, பாகிஸ்தான் இரு அணிகளும் நல்ல ஃபார்மில் உள்ளன. இந்தியா முதல் 2 போட்டிகளில் வென்றுள்ளது. பாகிஸ்தானும் 2 போட்டிகளில் வென்றுள்ளது. இன்று வெல்லும் அணி சூப்பர் 8 வாய்ப்பை உறுதி செய்யும்.

இந்தியா, பாகிஸ்தான் போட்டி
டி20 உலகக்கோப்பை விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ள நிலையில், உலகமே ஆவலுடன் எதிர்பார்க்கும் இந்தியா, பாகிஸ்தான் போட்டி இலங்கையின் கொழும்புவில் உள்ள பிரேமதேசா மைதானத்தில் இன்று (பிப்ரவரி 15) இரவு 7 மணிக்கு தொடங்குகிறது. மிகவும் பரபரப்பான இந்த போட்டியைக் காண ரசிகர்கள் ஆவலுடன் உள்ளனர்.
கொழும்புவில் மழை அச்சுறுத்தல்
இந்த போட்டிக்கான அனைத்து டிக்கெட்டுகளும் விற்றுத் தீர்ந்துவிட்ட நிலையில், மழை அச்சுறுத்தல் காரணமாக இந்தியா, பாகிஸ்தான் போட்டி நடப்பது சந்தேகமாகியுள்ளது. இலங்கை வானிலை ஆய்வு மையத்தின் அறிக்கைப்படி, பிப்ரவரி 15 (இன்று) நாள் முழுவதும் விட்டுவிட்டு மழை பெய்யலாம்.
காலை 9 முதல் மதியம் 3 வரை 50-60% மழையும், மாலை 7 முதல் இரவு 12 வரை 10-20% மழையும் பெய்ய வாய்ப்புள்ளது. மொத்தத்தில் மழை பெய்ய 96% வாய்ப்புள்ளது. இன்று பகலில் பெரிய அளவில் மழை இல்லை. இதனால் இரவு போட்டி தொடங்கினாலும் மழை பெய்தால் பாதியில் நிற்கும் வாய்ப்புள்ளது.
மேட்ச் தொடங்குவதில் தாமதம் ஏற்படலாம்
நேற்றும் கொழும்பில் வானிலை தெளிவாக இல்லை. காலை முதல் மதியம் வரை 30-35% மழைக்கு வாய்ப்பிருந்தது. நேற்று இரவும் நல்ல மழை பெய்தது. இதேபோல் இன்று மலையில் மழை பெய்தால் அவுட்பீல்ட் ஈரப்பதம் காரணமாக மேட்ச் தொடங்குவதில் தாமதம் ஏற்படும்.
ஆனாலும் பிரேமதேசா மைதானத்தில் மழைநீரை வெளியேற்றும் வசதிகள் உள்ளதால் மேட்ச்சின் பாதியில் மழை பெய்தாலும் நீண்ட நேரம் மேட்ச் தடைபோட வாய்ப்பில்லை.
ரிசர்வ் டே உண்டா?
இந்த உலககோப்பையில் இந்தியா, பாகிஸ்தான் இரு அணிகளும் நல்ல ஃபார்மில் உள்ளன. இந்தியா முதல் 2 போட்டிகளில் வென்றுள்ளது. பாகிஸ்தானும் 2 போட்டிகளில் வென்றுள்ளது. இன்று வெல்லும் அணி, புள்ளிப்பட்டியலில் முதலிடத்தை வலுப்படுத்தி, சூப்பர் 8 வாய்ப்பை உறுதி செய்யும்.
டி20 உலகக் கோப்பையில் இந்தியா-பாகிஸ்தான் 8 முறை மோதியுள்ளன. இதில் இந்தியா 7, பாகிஸ்தான் 1 முறை வென்றுள்ளது. குரூப் சுற்றுப் போட்டிகளுக்கு ரிசர்வ் டே கிடையாது. எனவே, இந்தப் போட்டிக்கும் ரிசர்வ் டே இல்லை. மழையால் போட்டி முழுமையாக நடைபெறாவிட்டால், இரு அணிகளுக்கும் தலா 1 புள்ளி வழங்கப்படும்.
இந்தியா, பாகிஸ்தான் பிளேயிங் லெவன்
இந்திய அணி பிளேயிங் லெவன்: சூர்யகுமார் யாதவ் (கேப்டன்), அபிஷேக் சர்மா, இஷான் கிஷன், திலக் வர்மா, ஹர்திக் பாண்ட்யா, ஷிவம் துபே, ரிங்கு சிங், அக்சர் படேல், குல்தீப் யாதவ் அல்லது அர்ஷ்தீப் சிங், வருண் சக்கரவர்த்தி, ஜஸ்பிரித் பும்ரா
பாகிஸ்தான் அணி பிளேயிங் லெவன்: சல்மான் அலி ஆகா (கேப்டன்), சாஹிப்சாதா ஃபர்ஹான், சைம் அயூப், பாபர் அசாம், ஷதாப் கான், உஸ்மான் கான், முகமது நவாஸ், ஃபஹீம் அஷ்ரஃப், ஷஹீன் ஷா அப்ரிடி, உஸ்மான் தாரிக், அப்ரார் அகமது

