Asianet News TamilAsianet News Tamil

பேண்டேஜுடன் வந்து பொளந்துகட்டிய மயன்க் அகர்வால்.. கார் டிரைவரை கௌரவப்படுத்தி நெகிழவைத்த பெருந்தன்மைக்காரர்!!

கடும் போராட்டத்திற்கு பிறகு மயன்க் அகர்வால் இந்திய அணியில் இடம் பிடித்துள்ளார். ஆஸ்திரேலிய மண்ணில் அந்த அணிக்கு எதிராக அறிமுகமாகும் மயன்க் அகர்வால், முதல் போட்டியிலேயே சிறப்பாக ஆடுவது கடினம்தான் என்றாலும் அவர் மீதான எதிர்பார்ப்பு எகிறியுள்ளது. 
 

mayank agarwals coach shared interesting facts about him
Author
India, First Published Dec 25, 2018, 4:04 PM IST

கடந்த 2 ஆண்டுகளாக உள்நாட்டு போட்டிகள் மற்றும் இந்தியா ஏ அணிக்காக அபாரமாக ஆடிவரும் மயன்க் அகர்வால், இந்திய அணியில் இடம் கிடைக்காமல் தவித்துவந்தார். தொடக்க வீரர்கள் ராகுலும் முரளி விஜயும் தொடர்ந்து சொதப்பியதால், ஆஸ்திரேலியாவுக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியில் அவர்கள் நீக்கப்பட்டு மயன்க் அகர்வால் அறிமுகமாகிறார். 

கடும் போராட்டத்திற்கு பிறகு மயன்க் அகர்வால் இந்திய அணியில் இடம் பிடித்துள்ளார். ஆஸ்திரேலிய மண்ணில் அந்த அணிக்கு எதிராக அறிமுகமாகும் மயன்க் அகர்வால், முதல் போட்டியிலேயே சிறப்பாக ஆடுவது கடினம்தான் என்றாலும் அவர் மீதான எதிர்பார்ப்பு எகிறியுள்ளது. 

மயன்க் அகர்வால் நீண்ட போராட்டத்திற்கு பிறகு இந்திய அணியில் அறிமுகமாகவுள்ள நிலையில், அவரது பயிற்சியாளர் இர்ஃபான் சையத் மை நேஷன் ஆங்கில இணையதளத்துக்கு அளித்த பிரத்யேக பேட்டியில், மயன்க் குறித்து பல சுவாரஸ்யமான தகவல்களை பகிர்ந்துள்ளார். 

mayank agarwals coach shared interesting facts about him

மயன்க் குறித்து பேசிய அவரது பயிற்சியாளர் இர்ஃபான், மயன்க்கை போல ஒரு வீரர் அதிக நேரம் பயிற்சி எடுத்திருக்கமாட்டார் என்று நான் மிகவும் தைரியமாக கூறுவேன். ஏனென்றால் அந்தளவிற்கு அதிக நேரம் வலையில் இருப்பார். மிகவும் பொறுமை வாய்ந்தவர் மயன்க். பயிற்சி செய்வதில் தொடங்கி அவருக்கான வாய்ப்பு வரை அனைத்திலுமே பொறுமையை கடைபிடிப்பார். கர்நாடகா அணிக்காக ஆடுவதற்குக்கூட நீண்டகாலம் காத்திருந்தார். ஆனால் வாய்ப்பு கிடைத்ததும் அதை சரியாக பற்றிக்கொண்டு திறமையை நிரூபித்தார். அதேபோல இந்திய அணியில் ஆட கிடைத்த வாய்ப்பையும் தவறவிடமாட்டார். 

mayank agarwals coach shared interesting facts about him

அவர் 15 வயதாக இருந்தபோது பெங்களூருவில் நான்காவது டிவிஷன் லீக்கில் ஆடினார். பின்னர் மாடர்ன் கிரிக்கெட் கிளப்பில் முதல் டிவிஷன் லீக் போட்டிகளில் ஆடினார். அப்போது நடந்த ஒரு சம்பவத்தை கண்டிப்பாக நான் பகிர்ந்தே ஆக வேண்டும். முதல் டிவிஷன் லீக் போட்டிக்கு ஒரு வாரத்திற்கு முன்னதாக அகர்வாலுக்கு இடது கண்ணுக்கு கீழே அடிபட்டது. மிகவும் மோசமான காயம் அது. கிடைத்த வாய்ப்பை தவறவிட்டுவிடக்கூடாது என்பதற்காக பேண்டேஜ் போட்டுக்கொண்டு காயத்துடன் அந்த போட்டியில் ஆடி சதமடித்தார். அதை என்றுமே மறக்கமுடியாது. அந்தளவிற்கு மன உறுதியும் மனவலிமையும் மிக்கவர் மயன்க். அவரை போன்ற ஒரு வீரர் ஒவ்வொரு அணிக்குமே தேவை. 

mayank agarwals coach shared interesting facts about him

அவர் 19 வயதுக்கு உட்பட்டோர் அணிக்காக ஆடி 2010ம் ஆண்டு உலக கோப்பை அணியில் இடம்பெற்றிருந்த மயன்க்கிற்கு கேஐஓசி சார்பாக பாராட்டு விழா நடத்தப்பட்டது. அப்போது, மேடைக்கு அவரது கார் டிரைவரை அழைத்து, இவர் மட்டும் இல்லையென்றால் நான் எந்த மைதானத்திற்கும் சரியான நேரத்திற்கு சென்றிருக்க முடியாது என்று கூறி கார் டிரைவரை கௌரவப்படுத்தினார் மயன்க் என்று தனது மாணவன் குறித்த பல சுவாரஸ்ய தகவல்களை பகிர்ந்துகொண்டார் பயிற்சியாளர் இர்ஃபான். 
 

Follow Us:
Download App:
  • android
  • ios