Kelvin Kiptum: மாரத்தான் உலக சாதனை வீரரான கென்யாவின் கெல்வின் கிப்டம் சாலை விபத்தில் உயிரிழப்பு!!

மாரத்தான் உலக சாதனை வீரரான கென்யாவின் கெல்வின் கிப்டம் (24) சாலை விபத்தில் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Marathon world record holder Kenya's Kelvin Kiptum dies in road accident

மேற்கு கென்யாவில் உள்ள ஒரு சாலையில் காரில் தனது பயிற்சியாளர் கெர்வைஸ் ஹகிசிமானாவுடன், மராத்தான் உலக சாதனை வீரரான கெல்வின் கிப்டம் சென்று கொண்டு இருந்தார். இவர்களுடன் ஒரு பெண்மணியும் சென்றதாக சொல்லப்படுகிறது. அப்போது ஏற்பட்ட விபத்தில் பயிற்சியாளர் கெர்வைஸ் ஹகிசிமானா மற்றும் கெல்வின் கிப்டம் இருவரும் பலியான சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அவர்களுடன் சென்ற பெண்மணியும் பலத்த காயமடைந்துள்ளார். கிப்டம் தான் காரை ஓட்டிச் சென்றுள்ளார்.

இவர்கள் எல்ரோரெட் நோக்கி சென்று கொண்டிருந்தனர். அப்போது கார் கிப்டமின் கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளாகியுள்ளது. இந்த விபத்தில் தான் கிப்டம் மட்டுமின்றி அவரது பயிற்சியாளரும் சம்பவம் இடத்திலேயே பலியான சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. இவர்களுடன் சென்ற பெண்மணி பலத்த காயங்களுடன் மருத்துவனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

INDU19 vs AUSU19: இந்தியா அதிர்ச்சி தோல்வி – 4ஆவது முறையாக அண்டர்19 உலகக் கோப்பையில் சாம்பியனான ஆஸ்திரேலியா!

சிறந்த மராத்தான் ஓட்டப்பந்தய வீரர்களில் ஒருவரான எலியுட் கிப்சோஜியை கிப்டம் 2023-ல் தோற்கடித்து போட்டியாளராக உருவானார். கடந்த அக்டோபரில் சிகாகோவில் கிப்டம் இரண்டு மணிநேரம் 35 வினாடிகளில் 26.1 மைல்களை (42 கிமீ) கடந்து கிப்சோஜின் சாதனையை முறியடித்தார். கிப்டமுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில், கென்யா விளையாட்டு அமைச்சர் அபாபு நம்வாம்பா தனது எக்ஸ் தளத்தில், ''பேரழிவு தரும் வகையில் வலி ஏற்பட்டுள்ளது. கென்யா ஒரு சிறப்பு ரத்தினத்தை இழந்துவிட்டது. வருத்தத்தை பகிர்ந்து கொள்ள வார்த்தைகள் இல்லை'' என்று பதிவிட்டுள்ளார். 

கங்குலினியின் 1.6 லட்சம் மதிப்புள்ள போன் திருட்டு; முக்கியமான டேட்டாவை பாதுகாக்க காவல் நிலையத்தில் புகார்!

கென்யாவின் எதிர்க்கட்சித் தலைவரும், முன்னாள் பிரதமருமான ரைலா ஒடிங்கா தனது பதிவில், ''நாடு ஒரு உண்மையான ஹீரோவை இழந்துவிட்டது'' என்று பதிவிட்டுள்ளார். உலக தடகளத் தலைவரான செபாஸ்டியன் கோ தனது பதிவில், ''கிப்டம் நம்பமுடியாத அடையாளத்தை விட்டுச் சென்றுள்ளார். நாங்கள் அவரை மிகவும் இழக்கிறோம்" என்று பதிவிட்டுள்ளார்.

Kavya Maran Video: 2ஆவது முறையாக சாம்பியனான சன்ரைசர்ஸ்: உற்சாகத்தை கண்ட்ரோல் பண்ண முடியல – வைரல் வீடியோ!

 கடந்த அக்டோபரில் தான் சிகாகோ மாரத்தானில் கிப்டம் 2:00:35 என்ற உலக சாதனையை நிகழ்த்தி, சக கென்யாவைச் சேர்ந்த எலியுட் கிப்சோஜினின் முந்தைய சாதனையை முறியடித்தார். சிகாகோவின் தெருக்களில் மூன்றாவது முறையாக ஆண்களுக்கான உலக சாதனையை கிப்டம் படைத்து இருந்தார். ஆனால், 1999-ல் மொராக்கோவின் காலித் கன்னோச்சிக்குப் பின்னர் இது முதல் வெற்றியாகும். மூன்றாவது மாரத்தானில் போட்டியிடும்போது கிப்டனின் வயது 23. கிப்டம் 2022-ல் வலென்சியாவிலும் பின்னர் கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் லண்டன் மராத்தானிலும் தனது முதல் போட்டியில் வென்றார்.

SA20 Final: 5 விக்கெட் கைப்பற்றிய மார்கோ யான்சன் – 2ஆவது முறையாக சாம்பியனான சன்ரைசர்ஸ் ஈஸ்டர்ன் கேப்!

பத்து ஆண்டுகளுக்கு முன்பு தனது வாலிப வயதில் கிப்டம் ஆடு மற்றும் செம்மறி ஆடுகளை மேய்த்து வந்தார். பின்னர் ருவாண்டாவைச் சேர்ந்த ஹக்கிசிமானா மற்றும் பிற ஓட்டப்பந்தய வீரர்களுக்கு பயிற்சி அளித்தபோது அவர்களுடன் கிப்டனும் இணைந்து கொண்டார். 2019 வாக்கில், கிப்டம் இரண்டு வாரங்களில் இரண்டு அரை மாரத்தான்களில் ஓடி, கோபன்ஹேகனில் 60:48 மற்றும் பிரான்சின் பெல்ஃபோர்ட்டில் 59:53 என்ற விகிதத்தில் ஓடி இருந்தார். தொடர்ச்சியாக, கோவிட்-19 தொற்றுநோய் தாக்கிய காலகட்டத்தில் கென்யாவில் தங்கியிருந்த ஹக்கிசிமானாவுடன் பயிற்சியைத் தொடங்கினார்.
 

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios