Mahendra sing doni press meet about chepauk ground

நடப்பு ஐபிஎல் தொடரில் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் தொடர்ச்சியாக போட்டிகளில் விளையாடதது துரதிருஷ்டவசமானது எனவும் எங்கள் தாய் கிரௌண்டில் விளையாட முடியாமல் போனது வருத்தம் அளிப்பதாகவும் சிஎஸ்கே அணியின் கேப்டன் மகேந்திரசிங் தோனி தெரிவித்தார். 

கடந்த ஏப்ரல் 7-ம் தேதி தொடங்கிய ஐபிஎல் தொடர் நேற்று முன்தினம் முடிவடைந்தது. மும்பையில் நடைபெற்ற இறுதிப் போட்டியில் ஹைதராபாத் அணியை சென்னை சிஎஸ்கே அணி தோற்கடித்து சாம்பியன் பட்டத்தை வென்றது.

மும்பையில் போட்டிக்கு முன்னதாக இரு அணிகளின் கேப்டன்களும் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினர். மேலும், கோப்பையுடனும் அவர்கள் போஸ் கொடுத்தனர். அந்த செய்தியாளர் சந்திப்பில் பேசிய தோனி, இரண்டு ஆண்டுகளுக்குப் பின்னர் ஐபிஎல் தொடரில் களமிறங்கியதால், ஆரம்பத்தில் கொஞ்சம் உணர்ச்சிமயமாக இருந்தோம். ஆனால், ஐபிஎல் தொடர் ஆரம்பித்தவுடன் புரபஷனலாக விளையாடத் தொடங்கினோம். 

சென்னை மைதானத்தில் விளையாடதது எங்களுக்கு மிகுந்த ஏமாற்றத்தை அளித்தது. இருப்பினும், அங்கு ஒரு போட்டியிலாவது விளையாட முடிந்தது மகிழ்ச்சியை அளித்தது. ஏனென்றால், அந்த ஒரு நிகழ்விற்காக ரசிகர்கள் நீண்டநாள்களாகக் காத்திருந்தனர் என்று தெரிவித்தார்.

கடந்த இரண்டு ஆண்டுகள் விளையாடாமல் இருந்தாலும், சென்னை அணிக்கான ரசிகர்கள் பெருகிக் கொண்டே இருந்தனர். சென்னை அணி மீண்டும் களமிறங்கி சிறப்பாக விளையாட வேண்டும் என ரசிகர்கள் எதிர்பார்த்துக் கொண்டிருந்தனர். சென்னையில் விளையாடதது துரதிருஷ்டவசமானது என தோனி தெரிவித்தார்.