Madurai lion won gold and silver medals in international taekwondo

சர்வதேச டேக்வாண்டோ போட்டியில் மதுரையை சிங்கக் குட்டிகளான கோகுலன் தங்கப் பதக்கமும், ரிதீஷ் நித்தியன் வெள்ளிப் பதக்கமும் வென்று தெறிக்கவிட்டுள்ளனர்.

சர்வதேச அளவிலான டேக்வாண்டோ போட்டிகள் மலேசியாவில் நடைபெற்றன.

இதில், இந்தியா சார்பில் தமிழகம், கேரளம் உள்ளிட்ட மாநிலங்களைச் சேர்ந்த 17 பேர் பங்கேற்றனர்.

தமிழகத்தில் இருந்து பங்கேற்ற நான்கு பேரில் மதுரையைச் சேர்ந்த பள்ளி மாணவர்கள் கோகுலன் (11), ரிதீஷ் நித்தியன் (10) ஆகியோரும் உண்டு.

இப்போட்டியில், பூம்சே பிரிவில் கோகுலன் தங்கப் பதக்கத்தையும், ரிதீஷ் நித்தியன் வெள்ளிப் பதக்கத்தையும் பெற்றனர்.

சர்வதேசப் போட்டியில் பதக்கங்களைப் வென்று மதுரை திரும்பிய இந்த சிங்கக் குட்டிகள் இருவரையும் மாவட்ட விளையாட்டு அலுவலர் எஸ்.முருகன், டேக்வாண்டோ சங்க செயலர் சென்னா நாகராஜன் ஆகியோர் பாராட்டினர்.

கோகுலம் மற்றும் ரிதீஷ் நித்தியன் இருவரும் மாவட்ட, மாநில மற்றும் தேசிய அளவிலான டேக்வாண்டோ போட்டிகளில் ஏராளமான பதக்கங்களை வென்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.