Madrid Open World First rank player advanced to next level

மாட்ரிட் ஓபன் மகளிர் ஒற்றையர் பிரிவில் உலகின் முதல் நிலை வீராங்கனையான ருமேனியாவின் சைமோனா ஹேலப் காலிறுதிச்சுற்றுக்கு முன்னேறினார்.

மாட்ரிட் ஓபன் மகளிர் ஒற்றையர் பிரிவில் காலிறுதிக்கு முந்தைய சுற்றில் உலகின் முதல் நிலை வீராங்கனையான ருமேனியாவின் சைமோனா ஹேலப் , செக்குடியரசின் கிறிஸ்டினா பிளிஸ்கோவாவை எதிர்கொண்டார்.

விறுவிறுப்பாக நடைப்பெற்ற இந்த ஆட்டத்தில் 6-1, 6-4 என்ற செட்களில் கிறிஸ்டினா பிளிஸ்கோவாவை வீழ்த்தினார் ஹேலப்.

இதேபோல உலகின் 2-ஆம் நிலை வீராங்கனையான டென் மார்க்கின் கரோலின் வோஸ்னியாக்கி 6-2, 6-2 என்ற நேர் செட்களில் நெதர்லாந்தின் கிகி பெர்டன்ஸை தோற்கடித்து காலிறுதிக்கு முன்னேறினார்.

போட்டித் தரவரிசையில் 6-ஆவது இடத்தில் இருக்கும் செக் குடியரசின் கரோலினா பிளிஸ்கோவா, காலிறுதிக்கு முந்தைய சுற்றில் 6-2, 6-3 என்ற செட்களில், போட்டித் தரவரிசையில் 9-வது இடத்தில் இருந்த அமெரிக்காவின் ஸ்லோன் ஸ்டீபன்ஸை வீழ்த்தினார். 

அதேபோன்று, ஸ்பெயினின் கார்பின் முகுருஸா 2-6, 6-4, 6-1 என்ற செட்களில் குரோஷியாவின் டோனா வெகிச்சை வென்றார். 

மற்றொரு வீராங்கனையான பிரான்ஸின் கரோலின் கார்சியா 6-2, 6-4 என்ற செட்களில் ஜெர்மனியின் ஜூலியா ஜார்ஜஸை தோற்கடித்து காலிறுதிக்கு முன்னேறினார்.