Madrid Open tennis Maria Sharapova progressing to quarterfinals
மாட்ரிட் ஓபன் டென்னிஸ் போட்டியில் முன்னாள் முதல்நிலை வீராங்கனை மரியா ஷரபோவா காலிறுதிக்கு சுற்றுக்கு முன்னேறி அசத்தியுள்ளார்.
மாட்ரிட் ஓபன் டென்னிஸ் போட்டியில் நான்காவது சுற்று ஆட்டத்தில் பிரான்சின் கிறிஸ்டினா மடேனோவிக்குடன் மோதினார் மரியா ஷரபோவா.
விறுவிறுப்பாக நடைப்பெற்ற இந்த ஆட்டத்தில் 6-3, 6-4 என்ற செட் கணக்கில் வென்று காலிறுதிக்கு முன்னேறினார் மரியா ஷரபோவா. 15 மாத தடைக்கு பின் மீண்டும் களமிறங்கிய ஷரபோவாவுக்கு இது முக்கியமான வெற்றியாகும்.
ஆனால்., உலகின் இரண்டாம் நிலை வீராங்கனையான கரோலின் வோஸ்னியாக்கி 2-6, 2-6 என்ற செட் கணக்கில் கிக்கி பெர்டன்ஸிடம் தோல்வியுற்றார்.
அதேபோன்று, விம்பிள்டன் சாம்பியன் முகுருசாவை 6-2, 4-6, 6-3 என்ற செட் கணக்கில் டேரியா கசாட்கின் வீழ்த்தினார்.
