Asianet News TamilAsianet News Tamil

Lsg vs gt: ipl 2022: Rashid Khan: முத்திரை பதித்த ரஷித் கான்: ஐபிஎல் டி20 தொடரில் சிறந்த பந்துவீச்சு பதிவு

Lsg vs gt: ipl 2022: Rashid Khan :புனேயில் நேற்று நடந்த ஐபிஎல் டி20 தொடரின் லீக்ஆட்டத்தில் லக்னோ சூப்பர் ஜெயின்ட்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் 4 விக்கெட்டுகளை வீழ்த்தி ஐபிஎல் தொடரில் சிறந்த பந்துவீச்சை குஜராத் டைட்டன்ஸ் அணியின் பந்துவீச்சாளர் ரஷித் கான் பதிவு செய்தார்.

Lsg vs gt: ipl 2022: Rashid Khan : Rashid Khan registers his all-time best figures in the IPL
Author
Pune, First Published May 11, 2022, 11:42 AM IST

புனேயில் நேற்று நடந்த ஐபிஎல் டி20 தொடரின் லீக்ஆட்டத்தில் லக்னோ சூப்பர் ஜெயின்ட்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் 4 விக்கெட்டுகளை வீழ்த்தி ஐபிஎல் தொடரில் சிறந்த பந்துவீச்சை குஜராத் டைட்டன்ஸ் அணியின் பந்துவீச்சாளர் ரஷித் கான் பதிவு செய்தார்.


புனேயில் நேற்று நடந்த ஐபிஎல் டி20 தொடரின் லீக் ஆட்டத்தில் லக்னோ சூப்பர் ஜெயின்ஸ்ட்ஸ் அணியை 62 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது குஜராத் டைட்டன்ஸ் அணி. முதலில் பேட் செய்த குஜராத் டைட்டன்ஸ் அணி 20ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 144 ரன்கள் சேர்த்திருந்தது. 145 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் களமிறங்கிய லக்னோ சூப்பர் ஜெயின்ட்ஸ் அணி 13.5 ஓவர்களில் 82 ரன்களுக்கு ஆட்டமிழந்து 62 ரன்களில் தோல்வி அடைந்தது.

Lsg vs gt: ipl 2022: Rashid Khan : Rashid Khan registers his all-time best figures in the IPL

இந்த வெற்றியின் மூலம், குஜராத் டைட்டன்ஸ் அணி 12 போட்டிகளில் 9 வெற்றிகளுடன் 18 புள்ளிகள் பெற்று முதல்அணியாக ப்ளே ஆஃப் சுற்றுக்குத் தகுதி பெற்றது. 

இந்த ஆட்டத்தில் குஜராத் டைட்டன்ஸ் அணியின் துணைக் கேப்டனும், சுழற்பந்துவீச்சாளரான ரஷித் கான் 3.5 ஓவர்கள் வீசி 24 ரன்கள் கொடுத்து 4 விக்கெட்டுகளை கைப்பற்றினார். இதில் 11 டாட்பந்துகளையும் ரஷித்கான் வீசினார். இது தவிர ஷாய் கிஷோர், ஷாய் தயால் ஆகியோரும் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

Lsg vs gt: ipl 2022: Rashid Khan : Rashid Khan registers his all-time best figures in the IPL

ரஷித் கான் தனது பந்துவீச்சால் தீபக் ஹூடா, குர்னல் பாண்டியா, ஜேஸன் ஹோல்டர், ஆவேஷ் கான் ஆகியோரின் விக்கெட்டுகளைச் சாய்த்தார். 
இந்தப் போட்டியில் ரஷித்கான் 24 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை வீழ்த்தியதே ஐபிஎல் டி20 தொடரில் சிறந்த பந்துவீச்சாக அமைந்தது. இதற்கு முன், 2020ம் ஆண்டு டெல்லி கேபிடல்ஸ் அணிக்குஎதிராக 7 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளையும், 2020ம் ஆண்டு பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு எதிராக 12 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளும் வீழ்த்தியதே சிறந்த பந்துவீச்சாக இருந்தது. அதை ரஷித் கான் முறியடித்தார்.

குஜராத் டைட்டன்ஸ் அணியின் வெற்றிக்குப்பின் ரஷித் கான் அளித்த பேட்டியில் “ இதற்கு முன் நடந்தஆட்டங்களில் லைன் லென்த் கிடைக்காமல் பந்துவீச சிரமப்பட்டேன். ஆனால், இந்த ஆட்டத்தில் சில மாற்றங்களுடன் பந்துவீசினேன். பேட்டிங் செய்ய ஆடுகளம் கடினமாகஇருந்தது” எனத் தெரிவித்தார்

Follow Us:
Download App:
  • android
  • ios