லேகோஸ் ஓபன் இன்டர்நேஷனல் சேலஞ்ச் பாட்மிண்டன் போட்டியில் ஒற்றையர் பிரிவில் ராகுல் யாதவும், இரட்டையர் பிரிவில் மானு அத்ரி - சுமீத் ரெட்டி இணையும் சாம்பியன் வென்றனர்.

லேகோஸ் ஓபன் இன்டர்நேஷனல் சேலஞ்ச் பாட்மிண்டன் போட்டியின் நைஜீரியாவில் நடைபெற்றது.

இந்தப் போட்டியின் ஒற்றையர் பிரிவில் போட்டித் தரவரிசையில் 4-வது இடத்தில் இருக்கும் இந்தியாவின் ராகுல் யாதவ் மற்றும் சகநாட்டவரான கரண் ராஜராஜன் மோதினர்.

இதில், 21-15, 21-13 என்ற நேர் செட்களில் கரண் ராஜராஜனை தோற்கடித்தார் ராகுல். இந்த வெற்றியின் மூலம் ராகுல் சாம்பியன் பட்டம் வென்று அசத்தினார்.

அதேபோன்று ஆடவர் இரட்டையர் இறுதிச் சுற்றில் இந்தியாவின் மானு அத்ரி - சுமீத் ரெட்டி இணை, நைஜீரியாவின் காட்வின் ஒலாபுவா - ஜுவோன் ஒபேயோரி இணையுடன் மோதியது.

இதில், 21-13, 21-15 என்ற நேர் செட்களில் காட்வின் ஒலாபுவா - ஜுவோன் ஒபேயோரி இணையைத் தோற்கடித்து சாம்பியன் வென்றது மானு அத்ரி - சுமீத் ரெட்டி இணை.