Lifetime Achievement Award for Badminton Champion Prakash Padukone

இந்திய பாட்மிண்டன் சங்கம் சார்பில் பாட்மிண்டன் ஜாம்பவான் பிரகாஷ் படுகோனுக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.

இந்திய பாட்மிண்டன் சங்க தலைவர் ஹிமந்தா விஸ்வா சர்மா நேற்று அறிக்கை ஒன்றை வெளியிட்டார். அதில், “பாட்மிண்டன் விளையாட்டிற்காக பிரகாஷ் படுகோன் செய்த பங்களிப்பைப் பாராட்டி அவருக்கு இந்த வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கப்படுகிறது. விருதுடன் ரூ.10 இலட்சம் ரொக்கப் பரிசும் வழங்கப்படும்.

மேலும், இனிவரும் ஒவ்வொரு ஆண்டும் பாட்மிண்டன் விளையாட்டின் வளர்ச்சிக்காக பாடுபடுபவர்களுக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கப்படும் என்று பெங்களூரில் நடைபெற்ற இந்திய பாட்மிண்டன் சங்க செயற்குழு கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டு உள்ளது“ என்று என்று ஹிமந்தா விஸ்வா சர்மா தெரிவித்தார்.