Asianet News TamilAsianet News Tamil

அவங்க 2 பேருமே தேவையில்ல.. இவங்களே போதும்!! உலக கோப்பைக்கான மிடில் ஆர்டர்.. நடுவரிசை ஜாம்பவானின் தேர்வு

ரிஷப் பண்ட் உலக கோப்பை அணியில் இடம்பெற வாய்ப்பு அதிகமாகவே உள்ளது. ரிசர்வ் தொடக்க வீரராக ராகுல் இருப்பார். ரிசர்வ் வேகப்பந்து வீச்சாளர் யார் என்பதும் கேள்வியாக உள்ளது. ஒருவேளை ரிசர்வ் வேகப்பந்து வீச்சாளர் இல்லாமல் செல்வதற்கான வாய்ப்பும் உள்ளது. 

laxman feels rishabh and dinesh karthik will not need in middle order for world cup
Author
India, First Published Feb 21, 2019, 5:28 PM IST

உலக கோப்பை நெருங்கிவிட்ட நிலையில், உலக கோப்பைக்கான அணியில் ஒன்றிரண்டு வீரர்களை தவிர மற்ற வீரர்கள் உறுதி செய்யப்பட்டு விட்டனர். 

ரோஹித், தவான், கோலி என டாப் ஆர்டர் வலுவாக உள்ளது. புவனேஷ்வர் குமார், பும்ரா, ஷமி, குல்தீப், சாஹல் என பவுலர்களும் உறுதி செய்யப்பட்டதுதான். ஆல்ரவுண்டர் ஹர்திக் பாண்டியா, மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன்களாக ராயுடு, தோனி, கேதர் ஜாதவ் ஆகியோர் இருப்பர். உலக கோப்பைக்கு முந்தைய தொடரான ஆஸ்திரேலிய தொடரில் தினேஷ் கார்த்திக் நீக்கப்பட்டு அவருக்கு பதிலாக ரிஷப் பண்ட் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். 

laxman feels rishabh and dinesh karthik will not need in middle order for world cup

ரிஷப் பண்ட் உலக கோப்பை அணியில் இடம்பெற வாய்ப்பு அதிகமாகவே உள்ளது. ரிசர்வ் தொடக்க வீரராக ராகுல் இருப்பார். ரிசர்வ் வேகப்பந்து வீச்சாளர் யார் என்பதும் கேள்வியாக உள்ளது. ஒருவேளை ரிசர்வ் வேகப்பந்து வீச்சாளர் இல்லாமல் செல்வதற்கான வாய்ப்பும் உள்ளது. 

ஆனால் ரிஷப் பண்ட் இடம்பெறுவது கிட்டத்தட்ட உறுதி. இந்நிலையில், இந்திய அணியின் மிடில் ஆர்டர் குறித்து கருத்து தெரிவித்துள்ள லட்சுமணன், 4ம் வரிசையில் ராயுடு, 5ம் வரிசையில் தோனி மற்றும் அதற்கடுத்த இரண்டு இடங்களில் ஹர்திக் மற்றும் கேதர் ஆகிய இருவரையும் இறக்கினால் சரியாக இருக்கும் என்று தெரிவித்துள்ளார். இதன்மூலம் ரிஷப் பண்ட் மற்றும் தினேஷ் கார்த்திக் ஆகிய இருவருமே தேவையில்லை என்கிற ரீதியாக லட்சுமணன் கருத்து தெரிவித்துள்ளார். 

Follow Us:
Download App:
  • android
  • ios