Asianet News TamilAsianet News Tamil

அஷ்வின், ஜடேஜா, பும்ராலாம் வெத்து.. நான் தான் கெத்து!! வெஸ்ட் இண்டீஸிடம் செம சம்பவம் செய்த குல்தீப்

அஷ்வின், ஜடேஜா, பும்ரா போன்ற சீனியர் பவுலர்களெல்லாம் கூட செய்யாத சம்பவத்தை குல்தீப் யாதவ் செய்துள்ளார். 
 

kuldeep yadav new record against west indies test match
Author
Rajkot, First Published Oct 6, 2018, 3:47 PM IST

அஷ்வின், ஜடேஜா, பும்ரா போன்ற சீனியர் பவுலர்களெல்லாம் கூட செய்யாத சம்பவத்தை குல்தீப் யாதவ் செய்துள்ளார். 

இந்தியா வெஸ்ட் இண்டீஸ் இடையே ராஜ்கோட்டில் நடந்துவரும் முதல் டெஸ்ட் போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங் ஆடிய இந்திய அணி 9 விக்கெட் இழப்பிற்கு 649 ரன்களை குவித்து முதல் இன்னிங்ஸை டிக்ளேர் செய்தது. 

இதையடுத்து முதல் இன்னிங்ஸை ஆடிய வெஸ்ட் இண்டீஸ் அணி, அஷ்வினின் சுழலில் சுருண்டது. முதல் இன்னிங்ஸில் வெறும் 181 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. முதல் இன்னிங்ஸின் இந்திய அணியின் சார்பில்  அஷ்வின் 4 விக்கெட்டுகளையும் ஷமி 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர். ஜடேஜா, உமேஷ், குல்தீப் ஆகிய மூவரும் தலா ஒரு விக்கெட்டை வீழ்த்தினர்.

ஃபாலோ ஆன் பெற்ற வெஸ்ட் இண்டீஸ் அணி இரண்டாவது இன்னிங்ஸை தொடர்ந்தது. இரண்டாவது இன்னிங்ஸிலும் வெஸ்ட் இண்டீஸ் அணி இந்திய அணியின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் மளமளவென விக்கெட்டுகளை இழந்தது. இம்முறை அந்த அணியின் தொடக்க வீரர் பவல் மட்டும் நிதானமாகவும் அதேநேரத்தில் அதிரடியாக ஆடி ரன்களையும் குவித்தார். ஒருமுனையில் பிராத்வெயிட், ஹோப், ஹெட்மயர், ஆம்பிரிஷ், சேஸ் என விக்கெட்டுகள் சரிந்தாலும் மறுமுனையில் அபாரமாக ஆடி அரைசதம் கடந்த பவல் 83 ரன்களில் ஆட்டமிழந்தார். 

அதன்பிறகு எஞ்சிய விக்கெட்டுகளும் சொற்ப ரன்களில் விழுந்தன. முதல் இன்னிங்ஸில் வெஸ்ட் இண்டீஸ் பேட்டிங் ஆர்டரை அஷ்வின் சரித்த நிலையில், இரண்டாவது இன்னிங்ஸில் குல்தீப் யாதவ் சரித்தார். குல்தீப் யாதவ் அபாரமாக பந்துவீசி 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார். வெஸ்ட் இண்டீஸ் அணி இரண்டாவது இன்னிங்ஸில் 196 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இதையடுத்து இன்னிங்ஸ் மற்றும் 272 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி அபார வெற்றி பெற்றது. இந்திய அணி இந்த போட்டியில் டெஸ்ட் கிரிக்கெட்டின் மிகச்சிறந்த வெற்றியை பதிவு செய்தது. 

kuldeep yadav new record against west indies test match

இந்த போட்டியின் இரண்டாவது இன்னிங்ஸில் 5 விக்கெட்டுகளை வீழ்த்தியதன் மூலம் புதிய மைல்கல் ஒன்றை எட்டியுள்ளார் குல்தீப் யாதவ். அதாவது டெஸ்ட், ஒருநாள் மற்றும் டி20 ஆகிய மூன்றுவிதமான கிரிக்கெட் போட்டிகளிலும் 5 விக்கெட்டுகளை வீழ்த்திய வீரர்கள் பட்டியலில் குல்தீப் இணைந்துள்ளார். 

இந்த பட்டியலில் இணையும் 7வது வீரர் குல்தீப் ஆவார். இந்திய அணியின் புவனேஷ்வர் குமாருக்கு அடுத்து இந்த பட்டியலில் இணையும் இரண்டாவது இந்திய வீரர் குல்தீப். புவனேஷ்வர் குமார், குல்தீப்பை தவிர வேறு எந்த இந்திய வீரரும் மூன்றுவிதமான கிரிக்கெட் போட்டிகளிலும் 5 விக்கெட்டுகளை வீழ்த்தியதில்லை.

kuldeep yadav new record against west indies test match

மூன்றுவிதமான கிரிக்கெட்டிலும் 5 விக்கெட்டுகளை வீழ்த்திய பவுலர்கள்:

டிம் சௌதி (நியூசிலாந்து)

அஜந்தா மெண்டிஸ் (இலங்கை)

உமர் குல் (பாகிஸ்தான்)

லசித் மலிங்கா (இலங்கை)

இம்ரான் தாஹிர் (தென்னாப்பிரிக்கா)

புவனேஷ்வர் குமார் (இந்தியா)

குல்தீப் யாதவ் (இந்தியா)
 

Follow Us:
Download App:
  • android
  • ios