Korean Open Japan defeat the veteran and progress to semi-finals
கொரிய ஓபன் சூப்பர் சீரிஸ் பாட்மிண்டன் போட்டியில் ஜப்பான் வீராங்கனையை வீழ்த்தி பி.வி.சிந்து அரையிறுதிக்கு முன்னேறினார்.
கொரிய ஓபன் சூப்பர் சீரிஸ் பாட்மிண்டன் போட்டி தென் கொரிய தலைநகர் சியோலில் நடைபெற்று வருகிறது.
இதில் நேற்று நடைபெற்ற மகளிர் ஒற்றையர் காலிறுதியில் இந்தியாவின் பி.வி.சிந்து, ஜப்பானின் மினட்சு மிடானியுடன் மோதினார்.
இதில், 21-19, 16-21, 21-10 என்ற செட் கணக்கில் மினட்சு மிடானியை தோற்கடித்தார் சிந்து.
போட்டித் தரவரிசையில் 5-வது இடத்தில் இருக்கும் சிந்து தனது அரையிறுதியில் சீனாவின் பிங் ஜியாவை சந்திக்கிறார்.
பிங் ஜியாவ் தனது காலிறுதியில் 21-7, 21-13 என்ற நேர் செட்களில் தென் கொரியாவின் சங் ஜீ ஹியூனை தோற்கடித்து அரையிறுதிக்கு முன்னேறினார்.
