Asianet News TamilAsianet News Tamil

சேவாக்கை தூக்கியாச்சு.. அடுத்த டார்கெட் ஸ்மித் தான்!! விராட்னு பேரு வச்சதும் போதும்.. எல்லாரையும் விரட்டிகிட்டே இருக்காரு

இங்கிலாந்துக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியில் சதமடித்த விராட் கோலி, சேவாக்கின் டெஸ்ட் சதத்தை சமன் செய்தார்.
 

kohli equals sehwag and smiths test century
Author
England, First Published Aug 21, 2018, 10:13 AM IST

இங்கிலாந்துக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியில் சதமடித்த விராட் கோலி, சேவாக்கின் டெஸ்ட் சதத்தை சமன் செய்தார்.

இங்கிலாந்துக்கு எதிரான முதல் இரண்டு டெஸ்ட் போட்டிகளில் தோல்வியை தழுவிய இந்திய அணி, மூன்றாவது டெஸ்டில் வெற்றியை நோக்கி சென்று கொண்டிருக்கிறது. மூன்றாவது டெஸ்டில் 521 ரன்களை இங்கிலாந்துக்கு இலக்காக நிர்ணயித்துள்ளது இந்திய அணி. அந்த அணி மூன்றாம் நாள் ஆட்டநேர முடிவில் விக்கெட் இழப்பின்றி 23 ரன்களை எடுத்துள்ளது. 

சர்வதேச கிரிக்கெட்டில் சதங்களையும் சாதனைகளையும் குவித்துவருகிறார் விராட் கோலி. இலக்குகளை விரட்டுவதில் வல்லவரான விராட், மற்ற வீரர்களின் சாதனைகளை விரட்டி முறியடிப்பதிலும் வல்லவராக திகழ்கிறார். ஒருநாள் கிரிக்கெட்டில் அதிக சதங்கள் அடித்த வீரர்களின் பட்டியலில் சச்சினுக்கு(49 சதங்கள்) அடுத்து இரண்டாவது இடத்தில் உள்ளார் கோலி(35 சதங்கள்).

kohli equals sehwag and smiths test century

மூன்றாவது டெஸ்டின் முதல் இன்னிங்ஸில் 97 ரன்களில் அவுட்டான விராட் கோலி, சதமடிக்கும் வாய்ப்பை இழந்தார். ஆனால், இரண்டாவது இன்னிங்ஸில் சதமடித்து அசத்தினார். 103 ரன்கள் குவித்தார் கோலி. இது கோலியின் 23வது சர்வதேச டெஸ்ட் சதம். இதன்மூலம் சேவாக்கின் டெஸ்ட் சதத்தை சமன் செய்துள்ளார் கோலி. கோலிக்கு நிகரான சமகால சிறந்த வீரராக திகழும் ஆஸ்திரேலிய அணியின் ஸ்மித்தும் 23 டெஸ்ட் சதங்கள் அடித்துள்ளார். 

kohli equals sehwag and smiths test century

சேவாக் மற்றும் ஸ்மித்தை சமன் செய்துள்ளார். விராட் கோலி 118வது இன்னிங்ஸில் 23வது சதத்தை அடித்துள்ளார். ஆனால் ஸ்மித் 117 இன்னிங்ஸ்கள் ஆடி 23 சதம் அடித்துள்ளார். அதனால் கோலிக்கு முந்தைய இடத்தில் ஸ்மித் உள்ளார். அதனால் இன்னும் ஒரு சதம் அடித்தால், ஸ்மித்த பின்னுக்கு தள்ளி கோலி முந்திவிடுவார். 

அதேபோல் டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக சதமடித்தது சச்சின் தான். 51 டெஸ்ட் சதங்களுடன் சச்சின் தான் முதலிடத்தில் உள்ளார். அதையும் கோலி முறியடிப்பதற்கான வாய்ப்பு உள்ளது. 

Follow Us:
Download App:
  • android
  • ios