kohli double century in third test match
இலங்கைக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியிலும் விராட் கோலி இரட்டை சதம் அடித்து சாதனை படைத்துள்ளார்.
இலங்கைக்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் 1-0 என இந்திய அணி முன்னிலை வகிக்கிறது.
மூன்றாவது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி டெல்லியில் இன்று தொடங்கியது. டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி, முதலில் பேட்டிங்கைத் தேர்வு செய்தார்.
தொடக்க ஆட்டக்காரர்களாக முரளி விஜயும் ஷிகர் தவானும் களமிறங்கினர். தொடக்கம் முதலே அதிரடியாக ஆடிய தவான், 23 ரன்களில் ஆட்டமிழந்தார். இதையடுத்து களமிறங்கிய புஜாராவும் 23 ரன்களில் வெளியேறினார்.
இதைத்தொடர்ந்து ஜோடி சேர்ந்த கேப்டன் கோலியும் முரளி விஜயும் சதம் விளாசினர். 155 ரன்களில் முரளி விஜய் வெளியேறினார். இவரைத்தொடர்ந்து வந்த வேகத்திலேயே ரஹானேவும் வெளியேறினார். நேற்றைய ஆட்ட நேர முடிவில் கோலி, 156 ரன்களுடனும் ரோஹித் சர்மா, 6 ரன்களுடனும் களத்தில் இருந்தனர்.
இரண்டாவது நாள் ஆட்டத்தைத் தொடர்ந்த கோலி, டெஸ்ட் போட்டியில் 6வது இரட்டை சதத்தை பதிவு செய்தார். இதற்கு முன்னதாக இந்திய வீரர்கள் சச்சின் மற்றும் சேவாக் ஆகியோருக்கு அடுத்தபடியாக 6 இரட்டை சதம் விளாசிய வீரர் என்ற பெருமையை கோலி பெற்றுள்ளார்.
கோலி, இன்னும் சில ஆண்டுகள் விளையாடுவார் என்பதால், மேலும் பல இரட்டை சதங்களை குவிக்க வாய்ப்புள்ளது. அரைசதம் கடந்த ரோஹித் சர்மா 65 ரன்களில் வெளியேறினார்.
உணவு இடைவேளை வரை இந்திய அணி, 5 விக்கெட் இழப்பிற்கு 500 ரன்களை குவித்து வலுவான நிலையில் உள்ளது.
