Kohli continues in first position in ICC rankings ...

ஐசிசி ஒரு நாள் கிரிக்கெட் தரவரிசைப் பட்டியலில் இந்திய கேப்டன் வீராட் கோலி தொடர்ந்து முதலிடத்தில் இருக்கிறார்.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred

ஒரு நாள் கிரிக்கெட் தரவரிசைப் பட்டியலை வெளியிட்டது ஐசிசி.

அதன்படி வீராட் கோலி 873 புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ளார். டேவிட் வார்னர் 861 புள்ளிகளுடன் இரண்டாவது இடத்திள் உள்ளார். மற்றும் தென் ஆப்பிரிக்க கேப்டன் டிவில்லியர்ஸ் 847 புள்ளிகளுடன் மூன்றாவது இடத்தில் உள்ளார்.

இந்திய விக்கெட் கீப்பர் எம்.எஸ்.தோனி 12-வது இடத்திலும், ஷிகர் தவன் 13-வது இடத்திலும், துணை கேப்டன் ரோஹித் சர்மா 14-வது இடத்திலும் உள்ளனர்.

பந்துவீச்சாளர்கள் தரவரிசையைப் பொறுத்தவரையில் இந்தியர்கள் யாரும் முதல் 10 இடங்களில் இல்லை. புவனேஸ்வர் குமார் 15-ஆவது இடத்தில் உள்ளார்.

அணிகள் தரவரிசையைப் பொறுத்தவரையில் இந்திய அணி 114 புள்ளிகளுடன் 3-வது இடத்தில் உள்ளது.