Kings XI Punjab appointed new chief coach Who knows?

ஐபிஎல் போட்டித் தொடரில் விளையாடும் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிக்கு ஆஸ்திரேலியாவின் பிராட் ஹாட்ஜ் புதிய தலைமைப் பயிற்சியாளராக நியமிக்கப்பட்டு உள்ளார்.

அடுத்தாண்டிற்கான ஐபிஎல் போட்டிகள் தொடங்கவுள்ளது. ஐபிஎல் போட்டித் தொடரின் அணிகளில் ஒன்றாக கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியும் திகழ்கிறது.

இந்த நிலையில், பஞ்சாப் அணிக்கு புதிய தலைமைப் பயிற்சியாளராக ஆஸ்திரேலியாவின் பிராட் ஹாட்ஜ் (42) நியமிக்கப்பட்டுள்ளார்.

ஆஸ்திரேலியாவின் முன்னணி வீரர்களில் ஒருவரான இவர் டி20 போட்டிகளில் மிகச் சிறந்த பேட்ஸ்மேன். ஆஸ்திரேலியாவில் நடந்து வரும் புகழ்பெற்ற பிக்பாஷ் டி-20 லீக்கில் மெல்போர்ன் ரெனெடாக்ஸ் அணிக்காக அடுத்த சீசனில் களமிறங்க இருக்கிறார்.

இதுவரை டி20 போட்டிகளில் 7 ஆயிரம் ஓட்டங்களுக்கு மேல் குவித்த எட்டு வீரர்களில் ஒருவராக இவர் உள்ளார்.

குஜராத் லயன்ஸ் அணியின் பயிற்சியாளராக 2016 மற்றும் 2017 சீசன்களில் செயல்பட்டுள்ளார். அப்போது 2016 சீசனில் அந்த அணி இறுதிப்போட்டி வரை முன்னேறியது. காயங்கள் காரணமாக 2017 சீசனில் தகுதிச் சுற்றுப் போட்டிகளோடு வெளியேறியது.

ஐபிஎல் தொடங்கியதில் இருந்து பங்கேற்று வரும் அணிகளில் கோப்பையை வெல்லாத மூன்று அணிகளில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியும் ஒன்று. இந்த முறை புதிய தலைமை பயிற்சியாளராக ஹாட்ஜ் நியமிக்கப்பட்டு இருப்பதால் அந்த அணி வெற்றி பெறும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.