Asianet News TamilAsianet News Tamil

பவுலிங்கில் பிரேக் கொடுத்த கேதர்.. சுழலில் அசத்திய சாஹல்!! தனி ஒருவனாக இந்திய அணியை அச்சுறுத்தும் நீஷம்

வில்லியம்சனும் லதாமும் பார்ட்னர்ஷிப் அமைத்து மெதுவாக போட்டியை இந்திய அணியிடமிருந்து பறித்து சென்ற வேளையில், வில்லியம்சனை வீழ்த்தி பிரேக் கொடுத்தார் கேதர் ஜாதவ். 
 

kedar jadhav breaks williamson latham partnership and chahal takes 2 wickets
Author
New Zealand, First Published Feb 3, 2019, 2:20 PM IST

நியூசிலாந்துக்கு எதிராக வெலிங்டனில் நடந்துவரும் கடைசி ஒருநாள் போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிய இந்திய அணி 252 ரன்களை எடுத்தது. முதல் நான்கு விக்கெட்டுகளை 18 ரன்களுக்கே இழந்துவிட்ட போதிலும், ராயுடு மற்றும் விஜய் சங்கரின் பொறுப்பான ஆட்டத்தால் இந்திய அணி சரிவிலிருந்து மீண்டது. பொறுப்புடன் ஆடிய விஜய் சங்கர் 45 ரன்களில் ஆட்டமிழந்தார். அபாரமாக ஆடிய ராயுடு 90 ரன்களில் ஆட்டமிழந்து சதமடிக்கும் வாய்ப்பை தவறவிட்டார். கேதர் ஜாதவும் சிறப்பாக ஆடி 34 ரன்கள் அடித்தார். கடைசி நேரத்தில் ஹர்திக் பாண்டியாவின் அதிரடியால் இந்திய அணி 252 ரன்களை எட்டியது. 

kedar jadhav breaks williamson latham partnership and chahal takes 2 wickets

253 ரன்கள் என்ற இலக்குடன் களமிறங்கிய நியூசிலாந்து அணியின் முதல் விக்கெட்டை 4வது ஓவரிலேயே வீழ்த்திவிட்டார் ஷமி. நிகோல்ஸை 8 ரன்களில் வெளியேற்றிய ஷமி, அதிரடியாக ஆடி ரன்களை குவித்து வந்த கோலின் முன்ரோவை 24 ரன்களில் போல்டாக்கி அனுப்பினார். இதையடுத்து களத்திற்கு வந்த டெய்லரை தனது முதல் ஓவரிலேயே அவுட்டாக்கினார் ஹர்திக் பாண்டியா. 

kedar jadhav breaks williamson latham partnership and chahal takes 2 wickets

38 ரன்களுக்கே 3 விக்கெட்டுகளை இழந்துவிட்டது நியூசிலாந்து அணி. அதன்பிறகு கேப்டன் கேன் வில்லியம்சன் - டாம் லதாம் ஜோடி ரன் சேர்ப்பதில் அவசரப்படாமல் பார்ட்னர்ஷிப் அமைக்க வேண்டியதன் அவசியத்தை உணர்ந்து பார்ட்னர்ஷிப் அமைத்தனர். இருவரும் நிதானமாக ஆடி ரன்களை சேர்த்தனர். அவர்கள் மெதுவாக போட்டியை இந்திய அணியிடமிருந்து பறித்து சென்ற வேளையில், வில்லியம்சனை வீழ்த்தி பிரேக் கொடுத்தார் கேதர் ஜாதவ். 

kedar jadhav breaks williamson latham partnership and chahal takes 2 wickets

வில்லியம்சன் வீழ்த்தப்பட்டதும் அவருடன் ஜோடி சேர்ந்து சிறப்பாக ஆடிய டாம் லதாமை 37 ரன்களில் சாஹல் வீழ்த்தினார். அதன்பிறகு கோலின் டி கிராண்ட்ஹோமின் விக்கெட்டையும் சாஹல் வீழ்த்தினார். இதையடுத்து சாண்ட்னெரும் நீஷமும் ஜோடி சேர்ந்து ஆடிவருகின்றனர். நீஷம் அதிரடியாக ஆடி பவுண்டரியும் சிக்ஸருமாக அடித்துவருகிறார். நீஷமின் விக்கெட்டை வீழ்த்த வேண்டியது அவசியம். நீஷமை வீழ்த்தவில்லை என்றால், இந்திய அணியின் வெற்றி சிரமமாகிவிடும்.

Follow Us:
Download App:
  • android
  • ios