Kashyap to qualify for South Korean Open Super Series
தென் கொரிய ஓபன் சூப்பர் சீரிஸ் பாட்மிண்டன் போட்டியின் பிரதான சுற்றில் விளையாட இந்திய வீரர் காஷ்யப் மற்றும் அஸ்வினி பொன்னப்பா - சாத்விக்சாய்ராய் இணை தகுதி பெற்றுள்ளனர்.
தென் கொரிய ஓபன் சூப்பர் சீரிஸ் பாட்மிண்டன் போட்டியின் தென் கொரிய தலைநகர் சியோலில் நடைபெற இருக்கிறது.
இந்தப் போட்டிக்கான முதல் தகுதிச் சுற்றில் இந்தியாவின் காஷ்யப் மற்றும் சீன தைபேவின் லின் யூ சியெனுடன் மோதினார்.
இதில், 21-19, 21-9 என்ற நேர் செட்களில் லின் யூ சியெனை வீழ்த்தினார் காஷ்யப்.
அதனைத் தொடர்ந்து நடைபெற்ற 2-வது தகுதிச் சுற்றில் காஷ்யப் சீன தைபேவின் கன் சாவ் யூவுடன் மோதினார்.
இதில், 21-19, 21-18 என்ற நேர் செட்களில் கன் சாவ் யூவை வீழ்த்தி பிராதான சுற்றை உறுதி செய்தார் காஷ்யப்.
பிரதான சுற்றின் முதல் ஆட்டத்தில் சீன தைபேவின் சூ ஜென் ஹாவை சந்திக்கிறார் காஷ்யப்.
அதேபோன்று கலப்பு இரட்டையர் பிரிவில் இந்தியாவின் அஸ்வினி பொன்னப்பா - சாத்விக்சாய்ராய் இணை தங்களின் முதல் சுற்றில் ஜெர்மனியின் பீட்டர் காஸ்பாயர் - ஓல்கா கொனான் இணையுடன் மோதியது.
இதில், 21-12, 21-15 என்ற நேர் செட்களில் பீட்டர் காஸ்பாயர் - ஓல்கா கொனான் இணையை வீழ்த்தியது.
இரண்டாவது சுற்றில் 27-25, 21-17 என்ற நேர் செட்களில் இந்தோனேசியாவின் ரொனால்ட் - அனீசா செளபிகா இணையை வீழ்த்தி பிராதான சுற்றுக்கு முன்னேறியது இந்தியாவின் அஸ்வினி பொன்னப்பா - சாத்விக்சாய்ராய் இணை.
