கொரிய ஓபன் கிராண்ட் ஃப்ரீ பாட்மிண்டன் போட்டியில் இந்தியாவின் பி.காஷ்யப், ஆடவர் ஒற்றையர் பிரிவில் அரையிறுதிச் சுற்றுக்கு வெள்ளிக்கிழமை முன்னேறினார்.
முன்னதாக, தனது காலிறுதியில் கொரியாவின் ஜியோன் ஹையோக் ஜின்னை எதிர்கொண்டார் காஷ்யப்.
இருவருக்கும் இடையே சுமார் 1 மணி நேரம் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் 18-21, 21-8, 21-16 என்ற செட் கணக்கில் காஷ்யப் வெற்றி பெற்றார்.
அவர் தனது அரையிறுதியில், போட்டித் தரவரிசையில் முதலிடத்தில் இருப்பவரும், கொரியாவைச் சேர்ந்தவருமான சன் வான் ஹோவைச் சந்திக்க உள்ளார்.
