kapil dev praised hardik pandiya
இந்திய அணியின் நம்பிக்கை நட்சத்திரமாக உருவெடுத்துவரும் ஹர்திக் பாண்டியாவை, தன்னை விட சிறந்த வீரராக வருவார் என முன்னாள் கேப்டன் கபில் தேவ் புகழ்ந்துள்ளார்.
பேட்டிங், வேகப்பந்து வீச்சு, பீல்டிங் என மூன்றிலுமே அசத்தும் ஒரு வீரர் கபில் தேவிற்கு பிறகு இந்திய அணிக்கு கிடைக்கவில்லை என்ற ஒரு சோகம் கிரிக்கெட் ரசிகர்களிடையே இருந்தது.
இந்திய அணியில், சச்சின், சேவக், கங்குலி, யுவராஜ் சிங் உள்ளிட்ட வீரர்கள் பேட்டிங்கில் ஜொலித்தபொழுதிலும் சுழற்பந்துதான் வீசினர். பேட்டிங்கும் ஆடி வேகப்பந்தும் வீசும் வீரர் என்பது இந்திய அணியின் கனவாக மட்டுமே இருந்தது.
அப்படியான வீரராக வலம்வந்த இர்ஃபான் பதானும் தொடர்ச்சியாக ஜொலிக்கத் தவறினார்.
இந்நிலையில், தற்போது கபில் தேவ் மாதிரியான ஒரு ஆல்ரவுண்டர் இந்தியாவிற்குக் கிடைத்துவிட்டார் என கிரிக்கெட் வீரர்களும் ரசிகர்களும் கருத்து தெரிவித்துவந்தனர்.
பேட்டிங், வேகப்பந்து வீச்சு, பீல்டிங் என அனைத்திலும் அசத்தும் ஒரு உண்மையான ஆல்ரவுண்டராக ஹர்திக் பாண்டியா வலம் வந்துகொண்டிருக்கிறார். இந்திய அணியின் வெற்றிக்கு முக்கிய பங்காற்றும் ஒரு வீரராக இவர் வருவார் என சச்சின், டிராவிட் போன்ற ஜாம்பவான்கள் ஏற்கனவே தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில், ஹர்திக் பாண்டியாவை தன்னுடன் ஒப்பிட வேண்டாம் எனவும் அவர் தன்னைவிட சிறந்த வீரராக வருவார் எனவும் கபில் தேவ் தெரிவித்துள்ளார்.
