kapil dev praise three indian cricketers
இந்திய அணியின் தலையெழுத்தை மாற்றியதாக 3 வீரர்களைக் குறிப்பிடுகிறார் உலகக் கோப்பை நாயகன் கபில் தேவ்.
இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள இந்திய அணியின் முன்னாள் கேப்டன் கபில் தேவ், இந்திய அணியில் மூன்று பேர் முக்கியமான மாற்றத்தை ஏற்படுத்தினர். அவர்கள் மூன்று பேரும் வெவ்வேறு பண்புகளை கொண்டவர்கள்.
முதலில் சச்சின்.. 24 ஆண்டுகள் கிரிக்கெட் விளையாடி பல இளைஞர்களுக்கு முன்னோடியாக உள்ளார்.
இரண்டாவது சேவக்.. இவர் நவீன கிரிக்கெட்டிற்கு ஏற்ப பல ஆண்டுகளுக்கு முன்பே ஆட்டத்தின் ஸ்டைலை மாற்றியவர்.
மூன்றாவது தோனி.. கிராமத்தில் இருந்து வந்து கிரிக்கெட்டில் சாதித்து காட்டியவர். அவரைப்போல கிராம இளைஞர்கள் மாற வேண்டும் என்ற எண்ணம் தோன்ற வைத்தவர்.

சச்சின், சேவக், தோனி ஆகிய மூவரால் தான் இந்திய அணி தற்போது உலகின் தலைசிறந்த அணியாக உள்ளது என கபில் தேவ் தெரிவித்துள்ளார்.
