தென் ஆப்பிரிக்க கேப்டன் டூபிளெஸ்ஸிஸ் பந்தை சேதப்படுத்தியதாக புகார் எழுந்துள்ளது.
இது தொடர்பாக ஐசிசி வெளியிட்டுள்ள அறிக்கையில், "ஆஸ்திரேலியா-தென் ஆப்பிரிக்கா இடையிலான 2-ஆவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி ஹோபர்ட்டில் நடைபெற்றது.

அதில் முதல் நாளில் பந்தின் தன்மையை மாற்றும் வகையில் சூயிங்காம் மென்ற உமிழ்நீரால் டூபிளெஸ்ஸிஸ் பந்தை சேதப்படுத்தியது தொலைக்காட்சி விடியோ பதிவின் மூலம் தெரியவந்துள்ளது. ஆனால் இதை டூபிளெஸ்ஸிஸ் மறுத்துள்ளார்.

இது தொடர்பாக போட்டி நடுவர் ஆன்டி கிராப்ட் முன்னிலையில் விசாரணை நடைபெறவுள்ளது' என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் விசாரணை நடைபெறும் தேதி குறிப்பிடப்படவில்லை.

டூபிளெஸ்ஸிஸ் பந்தை சேதப்படுத்தியது உறுதி செய்யப்பட்டால் அவருக்கு போட்டி ஊதியத்தில் 50 முதல் 100 சதவீதம் வரை அபராதம் அல்லது ஒரு போட்டியில் விளையாட தடை விதிக்கப்படலாம்.