Junior Division Boxing Tournament



மகளிர் இளையோர் மற்றும் ஜூனியர் பிரிவு குத்துச் சண்டை போட்டியில் 12 தங்கமும், இரண்டு பிரிவுகளிலும் 2 வெள்ளியும், 3 வெண்கலமும் வென்று அசத்தியது இந்தியா.

மகளிர் இளையோர் மற்றும் ஜூனியர் பிரிவு குத்துச் சண்டை போட்டி செர்பியாவில் நேற்றுடன் நிறைவடைந்தது.

ஏழாவது 'நேஷன்ஸ் கப்' குத்துச்சண்டைப் போட்டியில், பல்வேறு எடைப் பிரிவுகளில் இந்திய இளையோர் மற்றும் ஜூனியர் வீராங்கனைகள் பதக்கங்களைக் வென்றனர்.

ஜூனியர் பிரிவில், ஏக்தா சரோஜ் 46 கிலோ எடைப்பிரிவு, பூணம் 54 கிலோ எடைப்பிரிவு, அருந்ததி சௌதரி 60 கிலோ எடைப்பிரிவு வின்கா +80 கிலோ எடைப்பிரிவு உள்பட ஒன்பது வீராங்கனைகள் தங்கம் வென்றனர்.

இதேபிரிவில், சஞ்சீதா, லிபாக்ஷி வெள்ளியும், அர்ஷி கனம், யஷி சர்மா ஆகியோர் வெண்கலம் வென்றனர்.

இளையோர் பிரிவில், ஜோனி 60 கிலோ எடைப்பிரிவு, லலிதா 64 கிலோ எடைப்பிரிவு, நந்தினி 81 கிலோ எடைப்பிரிவு தங்கம் வென்றனர். ராஜ்பாலா 54 கிலோ எடைப்பிரிவில் வெண்கலம் வென்றார்.