கிரிக்கெட்டில் எல்லா காலத்திலும் தலைசிறந்த ஃபீல்டர் என்றால் அது தென்னாப்பிரிக்காவின் ஜாண்டி ரோட்ஸ் தான். தென்னாப்பிரிக்க அணியில் 1992 முதல் 2003ம் ஆண்டுவரை ஆடினார். 

பாயிண்ட் திசையில் நின்று அவர் பிடித்த அபாரமான கேட்ச்களும் செய்த மிரட்டலான ரன் அவுட்டுகளும் காலத்தால் அழியாதவை. ஃபீல்டிங் என்றால் உடனடியாக நினைவுக்கு வரும் பெயர் ஜாண்டி ரோட்ஸ் தான். ஃபீல்டிங்கின் அடையாளமாகவே ஜாண்டி ரோட்ஸ் திகழ்கிறார். 

ஃபீல்டிங்கின் அடையாளமாக திகழும் ஜாண்டி ரோட்ஸ், சர்வதேச அளவில் 5 ஆல்டைம் சிறந்த ஃபீல்டர்களை தேர்வு செய்துள்ளார். அந்த ஐவரில் ஒரு இந்திய வீரர் இடம் பிடித்துள்ளார். 

அனைத்து காலத்திலும் சிறந்த ஃபீல்டர்களாக ஆஸ்திரேலியாவின் ஆண்ட்ரூ சைமண்ட்ஸ், இங்கிலாந்து அணியின் முன்னாள் கேப்டன் பால் கோலிங்வுட், தென்னாப்பிரிக்காவின் டிவில்லியர்ஸ் மற்றும் கிப்ஸ், இந்திய வீரர் சுரேஷ் ரெய்னா ஆகிய ஐந்து பேரையும் தேர்வு செய்துள்ளார். 

ஜாண்டி ரோட்ஸ் தேர்வு செய்த சிறந்த ஃபீல்டர்களில் ஒருவராக ரெய்னா இருப்பது மிகப்பெரிய பெருமைதான். கடந்த ஆண்டு நடந்த இங்கிலாந்து தொடருக்கு பிறகு ரெய்னா இந்திய அணியில் இடம்பெறவில்லை. உலக கோப்பை அணியில் இடம்பெறவும் வாய்ப்பில்லை என்பது குறிப்பிடத்தக்கது.