Jogovich and nadal qualified to next round in French Open

பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் போட்டியின் முதல் சுற்றில் வென்ற நோவக் ஜோகோவிச், ரஃபேல் நடால் ஆகியோர் வெற்றி பெற்று அடுத்த சுற்றுக்கு முன்னேறினர்.

பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் போட்டியில் ஆடவர் ஒற்றையர் பிரிவில் போட்டித் தரவரிசையில் இரண்டாவது இடத்தில் இருக்கும் செர்பியாவின் ஜோகோவிச் மற்றும் ஸ்பெயின் வீரர் மார்செல் கிரானோலெர்ஸ் ஆகியோர் மோதினர்.

விறுவிறுப்பான இந்த ஆட்டத்தில் ஜோகோவிச் 6-3, 6-4, 6-2 என்ற நேர் செட் கணக்கில் மார்செல்லை வீழ்த்தி வெற்றிப் பெற்றார்.

இதேபோல், போட்டித் தரவரிசையில் நான்காவது இடத்தில் இருக்கும் ஸ்பெயினின் நடால் மற்றும் பிரான்ஸ் வீரர் பெனாய்ட் பேருடன் மோதியதில் 6-1, 6-4, 6-1 என்ற செட் கணக்கில் வென்றார் நடால்.

வெற்றிப் பெற்ற ஜோகோவிச் மற்றும் நடால் ஆகிய இருவரும் அடுத்த சுற்றுக்கு முன்னேறினர்.