Asianet News TamilAsianet News Tamil

அறுபது ஆண்டுகளில் முதல் முறையாக உலகக் கோப்பை போட்டிக்கு தகுதிபெறும் வாய்ப்பை இழந்தது இத்தாலி...

Italy lost the opportunity to qualify for the first time in the Sixty years
Italy lost the opportunity to qualify for the first time in the Sixty years
Author
First Published Nov 15, 2017, 10:16 AM IST


உலகக் கோப்பை கால்பந்து - 2018 போட்டிக்கான தகுதிச்சுற்று ஆட்டத்தில் இத்தாலி 0-1 என்ற கோல் கணக்கில் ஸ்வீடனிடம் வீழ்ந்து கடந்த 60 ஆண்டுகளில் முதல் முறையாக இந்தப் போட்டிக்கு தகுதிபெறும் வாய்ப்பை இழந்தது.

இத்தாலி - ஸ்வீடன் அணிகளுக்கு இடையேயான இரு 'பிளே-ஆஃப்' சுற்றுகளில், ஸ்டாக்ஹோமில் நடைபெற்றது. இதன் முதல் சுற்றில் ஸ்வீடன் 1-0 என்ற கணக்கில் வென்றிருந்தது.

இந்த நிலையில் இரண்டு அணிகளுக்கு இடையேயான 2-வது பிளே-ஆஃப் சுற்று இத்தாலியின் மிலன் நகரில் திங்கள்கிழமை இரவு நடைபெற்றது. இந்த ஆட்டம் இறுதியில் கோல்கள் இன்றி சமன் ஆனது. இதனால் முதல் ஆட்டத்தில் வென்றதன் அடிப்படையில் ஸ்வீடன் அணி உலகக் கோப்பை கால்பந்து போட்டிக்கு தகுதிபெற்றது.

இதையடுத்து, நான்கு முறை சாம்பியனான இத்தாலி கடந்த 1958-ஆம் ஆண்டுக்குப் பிறகு உலகக் கோப்பை போட்டிக்கு தகுதிபெறும் வாய்ப்பை முதல் முறையாக இழந்துள்ளது.

மறுபுறம், கடந்த 2006-ஆம் ஆண்டுக்குப் பிறகு ஸ்வீடன் தற்போது உலகக் கோப்பைக்கு தகுதி பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Follow Us:
Download App:
  • android
  • ios