Italian Open tennis Russian mahe Sharaoba wins ...
இத்தாலியன் ஓபன் டென்னிஸ் போட்டியில் மகளிர் பிரிவு முதல் சுற்றில் ரஷியாவின் மரியா ஷரபோவா வெற்றி பெற்றார்.
இத்தாலியன் ஓபன் டென்னிஸ் போட்டி ரோம் நகரில் நடைபெற்று வருகிறது.
இந்த போட்டியில் ஷரபோவா தனது முதல் சுற்றில், அமெரிக்காவின் கிறிஸ்டினா மெக் ஹாலேவுடன் மோதினார்.
விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த ஆட்டத்தின் முடிவில் 6-4, 6-2 என்ற நேர் செட் கணக்கில் ஷரபோவா, ஹாலேவை வீழ்த்தி வெற்றிப் பெற்றார்.
வெற்றிக்குப் பிறகு ஷரபோவா கூறியது:
“சமீபத்தில் விளையாட்டிய மாட்ரிட் மாஸ்டர்ஸ் போட்டியுடன் ஒப்பிடுகையில், இங்குள்ள சூழ்நிலை வித்தியாசமாக உள்ளது. நான் சற்று மெதுவாக விளையாடியதைப் போல உணர்கிறேன். 15 மாத தடையானது என்னை எந்தவிதத்திலும் பாதிக்கவில்லை. வெற்றிகளே எனக்கான இடத்தை உருவாக்கித் தருகின்றன. அவையே என்னை இந்த நிலைக்கு கொண்டு வந்துள்ளன. தடைக்குப் பிறகு களம் திரும்பி தற்போது 3-ஆவது போட்டியில் விளையாடி வருகிறேன். எனது கவனம் எனது விளையாட்டில் மட்டுமே உள்ளது”’ என்று அவர் கூறினார்.
ஷரபோவா தனது அடுத்தச் சுற்றில் குரேஷியாவின் மிர்ஜானா லூசிச் பரோனியாவுடன் மோத இருக்கிறார்.
